பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்டத் திருத்த மசோதா 2021-ஐ எதிர்த்து மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கடந்த ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவித்தது. ஏற்கனவே மத்திய அரசின் வங்கி இணைப்பு நடவடிக்கைகள் மூலமாக வேலை இழப்பு ஏற்படும் எனக்கூறி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதால் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
read more.. Bigg Boss : என்னால முடியல.. திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்!
இந்நிலையில் வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வேலை நிறுத்தத்தின் போது மக்களுக்கு உதவ மாற்று வழிகளை வங்கிகள் செய்திருந்தாலும் வங்கிச்சேவைகள் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய இழப்பைக் கணக்கிட முடியாது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் நடைபெற உள்ள இரண்டு நாட்களிலும் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் எப்போதும் போல் வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்கள் வேலை நிறுத்ததத்தில் பங்கேற்பதால் வங்கிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்படலாம் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
இதையும் படிங்க.. பாக்கியாவா இப்படி? ஆடிப்போய் நின்ற கோபி! பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட திருப்பம்
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், எல்.ஐ.சி ஊழியர்களை போலவே வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், 28, 29-ம் தேதிகளில் இரண்டு தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை, வங்கி இருப்புகளை சரி செய்வது, ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக பணம் கட்டுவது என பல டிஜிட்டல் முறைகள் வந்திருந்தாலும், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளை தங்களது பரிவர்த்தனைகளுக்கு நம்பியுள்ளனர். அதுமட்டுமின்றி மார்ச் மாதத்தின் இறுதி நாளான 28 மற்றும் 29 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது, வணிகர்கள், தொழிலபதிபர்கள் என பலருக்கும் பெரும் சிரமத்தை கொடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.