அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் வீடு, வாகனம் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைக்க உள்ளது.
முன் காலங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும்பொழுது அதற்கேற்றாற் போல் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்து வந்தன.
இதனால் வட்டி குறைப்பு, பயனாளிகளை சென்றடையாமல் இருந்தது. இந்நிலையில் தாங்கள் வட்டியை குறைக்கும்போது அதற்கேற்ப வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Also Read : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஓத்திவைப்பு
அதனை ஏற்று செயல்படுத்த எஸ்பிஐ முன்வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்கு தகுந்தாற்போல் சாமானிய மக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதான வட்டி மாற்றி நிர்ணயிக்கப்படும் என்று, பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Also Watch : பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.