ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த வகை டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? டிசம்பர் 31 தான் கடைசி நாள்!

இந்த வகை டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? டிசம்பர் 31 தான் கடைசி நாள்!

டெபிட் கார்டை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் கார்டு செயல்பாடு நிறுத்தப்படும்.

டெபிட் கார்டை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் கார்டு செயல்பாடு நிறுத்தப்படும்.

டெபிட் கார்டை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் கார்டு செயல்பாடு நிறுத்தப்படும்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுள் மேக்னடிக் ஸ்ட்ரைப் என்னும் "Magstripe" டெபிட் கார்டு பயன்படுத்துவோர் வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் இலவசமாகப் புதுப்பிக்கப்பட்ட டெபிட் கார்டை வாங்கிக்கொள்ளலாம்.

  காரணம், டிசம்பர் 31-ம் தேதி உடன் மேக்ஸ்ட்ரைப் கார்டுகள் எஸ்பிஐ வங்கியால் டிஆக்டிவேட் செய்யப்பட உள்ளன. Magstripe கார்டுகளுக்குப் பதில் யூரோபே, மாஸ்டர்கார்டு அல்லது விசா PIN ரக கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு மாற்றித் தரப்படும். இது முற்றிலும் வங்கியில் இலவச சேவை ஆகவே கிடைக்கும்.

  டெபிட் கார்டை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் கார்டு செயல்பாடு நிறுத்தப்படும். இதுகுறித்து முறையான அறிவிப்பை எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் அத்தனை வங்கிகளும் தங்களது Magstripe டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அப்டேட் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும் பார்க்க: வீட்டுக்கடன் வாங்கியோருக்கான தவனை குறைகிறது - டிசம்பர் 10 முதல் அமல்!

  Published by:Rahini M
  First published:

  Tags: SBI