10 லட்சம் விவசாயிகளுடன் மெகா மாநாடு... எஸ்பிஐ வங்கி ஏற்பாடு!

நாடு முழுவதும் உள்ள 1.40 கோடி விவசாய வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் நிச்சயம் இந்தக் கூட்டத்துக்கு வருவர் என எஸ்பிஐ வங்கி நம்பிக்கை தெரிவிக்கிறது.

Web Desk | news18
Updated: August 19, 2019, 5:55 PM IST
10 லட்சம் விவசாயிகளுடன் மெகா மாநாடு... எஸ்பிஐ வங்கி ஏற்பாடு!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 19, 2019, 5:55 PM IST
நாட்டின் மிகப்பெரும் வங்கியான எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் விவசாயிகளை நேரடியாகச் சந்திக்கும் விவசாயிகள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 14 ஆயிரம் எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் ஒரே நேரத்தில் இந்த விவசாயிகள் சந்திப்பு நடக்க உள்ளது. நாளை ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 10 லட்சம் விவசாயிகள் இந்த சந்திப்பில் கூடுவர் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

விவசாய வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காகவும் வங்கியின் முயற்சிகள் மற்றும் விவசாய வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அளிக்கவும் இந்தச் சந்திப்பு நடக்க உள்ளது.


நாடு முழுவதும் உள்ள 1.40 கோடி விவசாய வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் நிச்சயம் இந்தக் கூட்டத்துக்கு வருவர் என எஸ்பிஐ வங்கி நம்பிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் விவசாயக் கடன், நடைமுறைக் கடனை முடிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க: Paytm பயனாளரா? ’இந்த’ ஆப்ஸ்-களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்!

29 ஆண்டுகளாக ஊதியமே பெறாமல் பணியாற்றிவரும் அரசு மருத்துவர்

Loading...

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...