ஹோம் /நியூஸ் /வணிகம் /

sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நம்பர்!

sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நம்பர்!

எஸ்பிஐ

எஸ்பிஐ

sbi : இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம், வங்கி தொடர்பான சேவைகளை பெறலாம் என கூறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  எஸ்பிஐ (state bank of india) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கி தொடர்பான எந்தவிதமான தேவைகளுக்கும், சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் கஸ்டமர்ஸ் அழைக்க வேண்டிய சேவை எண்ணை எஸ்பிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில், லட்சக் கணக்கான மக்கள் பலவிதமான அக்கவுண்டுகளை தொடர்கின்றனர்.வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் எஸ்பிஐ வங்கி அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் கூட ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதாவது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை வைத்து தான், பணத்தை எடுக்க முடியும் .அதே போல் ஆன்லைன் பரிவர்த்தனையில் எந்த மோசடியும் நடந்து விட கூடாது என வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வலியுறுத்துவது, போலி மேசேஜ்களை கண்டு ஏமாற வேண்டாம் என மெசேஜ் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  இதையும் படிங்க,, . LIC pension: இனி நீங்களும் ஓய்வு காலத்தில் ரூ. 12,000 வரை பென்சன் வாங்கலாம்! எல்.ஐ.சி தரும் வாய்ப்பு

  எஸ்பிஐ வங்கியின் சேவை எண்ணை கூட கூகுளில் நேரடியாக தேட வேண்டாம் என்று எஸ்பிஐ தளத்தில் இருக்கும் நம்பரை பயன்படுத்தவும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதற்கு காரணம், சேவை எண் என நம்பி பல வாடிக்கையாளர்கள் தவறுதலாக சில நம்பர்களை தொடர்பு கொண்டு அதன் மூலம் அவர்கள் மோசடியில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறியதால் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்கள் சேவையில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

  இதையும் படிங்க.. State bank: எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பை தொடங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா?

  அந்த வகையில் எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தப்படியே அனைத்து வசதிகளையும் பெற 1800 1234 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம், வங்கி தொடர்பான சேவைகளை பெறலாம் என கூறியுள்ளது.

  இந்த இலவச எண்ணை அழைத்தால், வங்கி இருப்பு மற்றும் கடந்த கால பரிவர்த்தனை விவரங்களைப் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது ஒரு டோல் ஃபிரீ எண் ஆகும். இந்த கொரோனா காலக்கட்டத்தில் சின்ன சின்ன தேவைகளுக்கு கூட வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டாம் என்ற நோக்கில் எஸ்பிஐ வங்கி இந்த  சேவையை பயன்படுத்தும் படி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: SBI, STATE BANK