• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • SBIயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இனி வீட்டிலே இந்த சேவையை தொடங்கலாம்!

SBIயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இனி வீட்டிலே இந்த சேவையை தொடங்கலாம்!

எஸ்பிஐ

எஸ்பிஐ

இந்த படிகளை பின்பற்றினாலே போதும் ஈஸியாக எஸ்பிஐ நெட் பேக்கிங்கை ஓபன் செய்து கொள்ளலாம்.

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் இருக்கு. ஆனால் இப்போது வரை வங்கியின் நெட் பேக்கிங் வசதியை பயன்படுத்த முடியவில்லை அல்லது தொடங்கவில்லை என தவிக்கிறீர்களா?

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, பென்சன் கணக்கு மற்றும் சம்பள கணக்குகளை தொடர்கின்றனர். வாடிக்கையாளர்கள் சேவையில் பெரும் கவனம் செலுத்தும் எஸ்பிஐ சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அண்மையில் கூட பண்டிக்கைகால சலுகையாக ஹோம் லோனில் வட்டி விகிதத்தை குறைத்து அதற்கான செயலாக்க கட்டணத்தை முழுமையாக குறைத்துள்ளது.

    எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் இருக்கு. ஆனால் இப்போது வரை வங்கியின் நெட் பேக்கிங் வசதியை பயன்படுத்த முடியவில்லை அல்லது தொடங்கவில்லை என தவிக்கிறீர்கள் எனில் கவலை வேண்டாம் .அதிகம் படிக்காதவர்கள் அல்லது ஆன்லைனில் இதுக் குறித்து செய்ய குழப்பம் இருப்பவர்கள் இந்த படிகளை பின்பற்றினாலே போதும் ஈஸியாக எஸ்பிஐ நெட் பேக்கிங்கை ஓபன் செய்து கொள்ளலாம். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் நெட் பேக்கிங் ஓபன் செய்ய முதலில் https://retail.onlinesbi.com/retail/userdrivenregdetails.htm வங்கியின் இந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இதில் New User என்ற விருப்ப தேர்வை கிளிக் செய்து Next பட்டனை கிளிக் செய்யவும். பின்பு, அதில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை நிரப்பவும். இதில் Account Number, CIF Number,Branch Code வங்கியில் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.

    அடுத்தது, Facility Required என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்து பின்பு Submit கொடுக்க வேண்டும். இப்போது வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அந்த நம்பரை இங்கே பதிவு செய்து Confirm பட்டனை கிளிக் செய்யவும். இப்போது ஒரு திரை தோன்றும். அதில் I have ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் ATM Card குறித்த தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.



    பின்பு Username மற்றும் Password போன்றவற்றை கொடுக்க வேண்டும்.இறுதியாக i accept the Terms and Conditions என்பதை டிக் செய்து Submit கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் முடிந்தது. இப்போது நீங்கள் எஸ்பிஐ வங்கியின் நெட் பேக்கிங்கை ஓபன் செய்து விட்டீர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: