• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்த மழைக்காலத்தில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டுமா? எஸ்பிஐ கைக்கொடுக்கிறது!

இந்த மழைக்காலத்தில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டுமா? எஸ்பிஐ கைக்கொடுக்கிறது!

எஸ்பிஐ

எஸ்பிஐ

நிதி இல்லாமல் வீடு கட்டும் பணியை நிறுத்தி வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த லோன் கட்டாயம் கைக்கொடுக்கும்

  • Share this:
    எஸ்பிஐ வங்கியில் இருக்கு ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

    சொந்த வீடு இன்று வரை பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. அதிலும் மிடில் கிளாஸ் மக்களை எடுத்து கொண்டால் அவர்களின் மிகப் பெரிய கனவு எது என்று கேட்டால் சொந்தமாக ஒரு வீடு என்று தான் சொல்வார்கள். வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பாருன்னு சும்மாவா சொன்னாங்க. வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கிடைக்கும் ஹோம் லோன்களை நம்பி தான் வீடு விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். அந்த வகையில் வீடு கட்ட கைக்கொடுக்கும் எஸ்பிஐயின் ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    ஏற்கெனவே, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான சிறப்புத் திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதாவது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.70 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த வட்டி விகிதம் ஆகும். அதுமட்டுமில்லை சம்பளம் பெறும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு என வீட்டுக்கடனில் பல சலுகைகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வீடு கட்ட நிதி இல்லாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பையும் வழங்குகிறது.



    எஸ்பிஐயின் இந்த ரியால்டி கோல்ட் லோன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை கடனை பெற முடியும்.மொத்த கடன் மதிப்பில் 0.50% ப்ரோசசிங் ஃபீஸ் வசூலிக்கப்படும்.எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.36 மாதங்களில் இ.எம்.ஐ. நகைக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அதாவது எஸ்பிஐயில் ஹோல் லோன் வாங்கி வீடு அல்லது நிலத்தை வாங்கியவர்கள் போதிய நிதி இல்லாமல் வீடு கட்டும் பணியை நிறுத்தி வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த லோன் கட்டாயம் கைக்கொடுக்கும். நகைகளை வைத்து எஸ்பிஐயின் இந்த கடனை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: