முகப்பு /செய்தி /வணிகம் / அதிக வட்டி.. மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் எஸ்பிஐ! இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!

அதிக வட்டி.. மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் எஸ்பிஐ! இந்த முறை மிஸ் பண்ணிடாதீங்க!

எஸ்பிஐ

எஸ்பிஐ

5 வருட பிக்சட் டெபாசிட்டில் 5.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.ஆனால் இதில் வட்டி விகிதம் 6.45% ஆக இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாரத ஸ்டேட் வங்கி (sbi) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டத்தை  (fixed deposit) நீட்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பை இந்த முறையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI 'WECARE' . இந்த திட்டம் ஆரம்பத்தில்

செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டது. பின்பு கோவிட்-19 காரணமாக சிறப்பு FD திட்டமான  இது பல முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான திட்டத்தின் வட்டியை திருத்திய ஆக்சிஸ் வங்கி! எல்லாமே மாறுது!

"SBI Wecare" டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் 30 bps கூடுதல் பிரீமியம் வழங்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கான TD ல் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் '5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்' தவணைக்காலம் மட்டுமே.குறுகிய கால பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடி அலைபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். அதே போல் சேமிப்பு பணத்துக்கு மற்ற திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படுகிறது.

“SBI Wecare” டெபாசிட் திட்டம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று SBI தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான கூடுதல் 30 bps வட்டி விகிதத்தை வழங்குகிறது. தற்போது, ​​எஸ்பிஐ பொது பிரிவினருக்கு 5 வருட பிக்சட் டெபாசிட்டில் 5.65% வட்டி விகிதத்தை வழங்குகிறது.ஆனால் இதில் வட்டி விகிதம் 6.45% ஆக இருக்கும்.

stock market : அதிக லாபம் வேண்டுமா? இதில் தைரியமா முதலீடு செய்யுங்கள்!

எஸ்பிஐ உத்சவ் டெபாசிட் திட்டம்

இதே போல் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்பி வங்கி மற்றொரு பிக்சட் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. "உத்சவ் டெபாசிட்" எனப்படும், இந்த திட்டத்தில் 6.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது 75 நாட்களுக்ளுக்கான திட்டம் ஆகும். அக்டோபர் 30, 2022 வரை மட்டுமே இது செயல்பாட்டில் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: SBI, STATE BANK, State Bank of India