Home /News /business /

SBI பேங்கில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டத்தில் இதுவும் ஒன்று!

SBI பேங்கில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டத்தில் இதுவும் ஒன்று!

எஸ்பிஐ

எஸ்பிஐ

SBI அக்கவுண்டில் நெட் பேக்கிங்,மொபைல் பேக்கிங் வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த வழியாக உள்ளது.இது ஒரு சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்தால் முதிர்வு காலத்தில் மிகப் பெரிய தொகையை கையில் பார்க்கலாம். சேமிப்பை தொடங்க, அல்லது நல்லதொரு முதலீட்டை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த பிபிஎப் திட்டம் கண்டிப்பாக நல்ல தேர்வாகும்.

    ஒரு பிபிஎப் கணக்கின் கால அளவு 15 வருடங்கள், இந்த கால அளவு முடிந்த பிறகு 5 வருடங்கள் என்ற அளவில் நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூபாய் 5,000 ஆகும். ஒரு நிதியாண்டில் நீங்கள் அதிகப்பட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ், பொத்துறை வங்கிகளிலும் இந்த திட்டத்தை சேமிப்பதற்கு பல வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் இந்த திட்டத்தை தொடங்க நினைப்பவர்கள் எப்படி எளிமையாக ஆன்லைனில் இதை எளிமையாக செய்யலாம் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.

    இதை செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதும். இதற்கு நீங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்பரை கையில் வைத்து இருந்தால் போதும். அதே போல் அக்கவுண்டில் நெட் பேக்கிங்,மொபைல் பேக்கிங் வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும். இப்போது ஆன்லைனில் எப்படி பிபிஎப் கணக்கை தொடங்குவது என பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. SBI நகைக்கடனில் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்! ஏன் தெரியுமா?

    1. எஸ்பிஐ வங்கியின் http://www.onlinesbi.com தளத்திற்கு செல்ல வேண்டும்.

    2. வலதுபுறத்தில் தோன்றும் ‘கோரிக்கை மற்றும் விசாரணைகள்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

    3. இப்போது தோன்றும் ‘புதிய PPF கணக்குகள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    4. அதில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, CIF எண் மற்றும் PAN ஆகியவை காட்டப்படும்.

    5. கூடவே, வங்கிக் கிளையின் வங்கிக் கிளைக் குறியீடு மற்றும் கிளையின் பெயரை உள்ளிடவும்.

    6. இபோது ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்யவும்.

    7. அடுத்தது, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

    8. உங்கள் படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது,

    9. இப்போது படிவத்தைப் பதிவிறக்கவும்.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்குவது ஏன் முக்கியம் தெரியுமா?

    விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், படிவத்திற்கு  ஒரு குறிப்பு எண் உருவாக்கப்படும். இந்த குறிப்பு எண் சமர்ப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும், பின்னர் அது நீக்கப்படும். எனவே, 30 நாட்களுக்குள், KYC ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் கிளைக்கு நீங்கள் செல்வது கட்டாயம் ஆகும் .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Savings, SBI, State Bank of India

    அடுத்த செய்தி