முகப்பு /செய்தி /வணிகம் / நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எஸ்பிஐ... வந்தாச்சு சூப்பர் அப்டேட்!

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எஸ்பிஐ... வந்தாச்சு சூப்பர் அப்டேட்!

எஸ்பிஐ அப்டேட்

எஸ்பிஐ அப்டேட்

இத்தனை விவரங்களையும் பெற வங்கிக்கு அலைந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, பென்சன் கணக்கு மற்றும் சம்பள கணக்குகளை தொடர்கின்றனர். வாடிக்கையாளர்கள் சேவையில் பெரும் கவனம் செலுத்தும் எஸ்பிஐ சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அண்மையில் கூட பண்டிக்கைகால சலுகையாக ஹோம் லோனில் வட்டி விகிதத்தை குறைத்து அதற்கான செயலாக்க கட்டணத்தை முழுமையாக குறைத்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக பென்சன் பெறுபவர்கள் இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக எஸ்பிஐயிடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வங்கி அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது எஸ்பிஐ வங்கி, தனது பென்சன் சேவா போர்ட்டலை பென்சனர்களுக்கு ஏற்றார்போல மாற்றி புது வசதிகளையும் புகுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் பென்சன் தொடர்பான சேவைகள் அனைத்தையும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நினைத்து நேரத்தில் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். எஸ்பிஐ பென்சன் சேவா போர்ட்டல் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்கும். இதில் முன்பு இருந்ததை விட அனைத்து வசதிகளும் எளிமையாகப்பட்டு புதுபிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பென்சன் பெறும் பயனர்கள் தங்களது பென்சன் ஸ்லிப்பை இந்த வெப்சைட்டில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதே போல் ஃபார்ம் 16 போன்ற ஆவணங்களையும் தேவைப்பட்டால் பயனர்கள் இங்கு டவுன்லோடு செய்யலாம். மேலும், தங்களது பணபரிவர்த்தனை குறித்த விவரங்கள், ஆயுள் சான்றிதழ் குறித்த விவரங்கள், தற்போதைய ஸ்டேட்டஸ் என அனைத்து தகவல்களையும் இந்த போர்ட்டலில் பார்க்க முடியும் எனவும் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பென்சன் ஸ்லிப்பை இமெயில் ஐடி வாயிலாகப் பெற விரும்பினால் இங்கேயே அதற்கும் கோரிக்கை வைக்க முடியும். இனி பென்சன் பெறுபவர்கள் இத்தனை விவரங்களையும் பெற வங்கிக்கு அலைந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: News On Instagram, SBI