SBI வங்கியில் நகைக்கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் எஸ்பிஐ வங்கி நகைக்கடனில் விவசாயிகளுக்கு மட்டும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதுக் குறித்து பார்ப்போம்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் நகைக்கடன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தேவை இருப்பவர்கள் எஸ்பிஐ வங்கியில் 50 கிராம் வரையில் தங்க நாணயங்கள் மீதோ அல்லது ஆபர தங்க நகைகளை வைத்தோ குறைந்த வட்டியில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கியிடம் இருந்து புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் எஸ்.பி.ஐ வங்கி விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. . இதற்காக யோனோ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை இருக்கும் விவசாயிகள் இதுக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியை அணுகலாம் அல்லது வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகி கேட்கலாம், எஸ்பிஐ அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்திலும் பார்க்கலாம். இந்த பதிவில் இந்த நகைக்கடன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றி பார்ப்போம்.
7% வரை குறைவான வட்டியில் விவசாயிகள் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்
தங்கக் கட்டிகள் மீது நகைக் கடன் வழங்கப்படாது. சொந்த நிலத்தில் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், சுயதொழில் முனைவோர்கள் ஆகியோர்களுக்கு RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளில் கீழ் இந்த நகைக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் விவசாயம் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் நிறுவனம் அல்லாத கடன் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பும் எந்தவொரு நபரும் இந்த தங்க நகைக்கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
Avail SBI's Agri gold loan at lowest interest rate through YONO. #SBIAgriGoldLoan #SBI #AzadiKaAmritMahotsavWithSBI pic.twitter.com/jawDwSzWsH
— State Bank of India (@TheOfficialSBI) December 21, 2021
இதற்கு தங்க அடமானத்தின் மீது பெறப்பட்ட அதிக வட்டி விகிதக் கடனைத் திருப்பி செலுத்துப்பதற்கு இந்த கடனுக்காக விண்ணப்பிப்பதாக சுய உறுதிமொழிச் சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும். நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதான சான்றுகளையும் கண்டிபாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.