Home /News /business /

SBIயில் இந்த கார்டை வாங்குவது ரொம்ப ரொம்ப ஈஸி தெரியுமா?

SBIயில் இந்த கார்டை வாங்குவது ரொம்ப ரொம்ப ஈஸி தெரியுமா?

எஸ்பிஐ

எஸ்பிஐ

SBI-ல் லாகின் செய்து கொண்டு, YONO Krishi-ஐ கிளிக் செய்யவும். பின் Khata-வை கிளிக் செய்து Kisan Credit Card-ற்கு செல்லவும்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்களின் சாகுபடி செலவுகளைச் சமாளிக்க சரியான நேரத்தில் மற்றும் போதுமான கடனை வழங்குகிறது SBI பேங்க்கின் கிசான் கிரெடிட் கார்டு (KCC). இந்த கிரெடிட் கார்டு விவசாயிகளின் எதிர்பாராத அவசர செலவுகள் மற்றும் பிற தொழில் செலவுகளை நிவர்த்தி செய்கிறது.

    கடன் வாங்குபவர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கடன்களைப் பெற அனுமதிக்கும் எளிய நடைமுறை மூலம் கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. SBI-ன் கிசான் கிரெடிட் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது, இதன் பலன்கள், வட்டி விகிதம், விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் செயல்முறை ஆகியவை பற்றி இங்கே பார்க்கலாம்.

    அம்சங்கள் மற்றும் நன்மைகள்..

    * கிசான் கிரெடிட் கார்டு ரிவால்விங் கேஷ் கிரெடிட் அக்கவுண்ட் (revolving cash credit account) போல இருக்கும். அதாவது ஒரு அக்கவுண்ட் ஹோல்டர் ஒரு குறிப்பிட்ட நிதி வரம்பு வரை மீண்டும் மீண்டும் கடன் வாங்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

    * கணக்கில் ஏதேனும் கடன் இருப்பு இருந்தால், சேவிங்ஸ் பேங்க்கின் வட்டி விகிதம் கிடைக்கும்

    * ரூ.3 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கு உடனடி 3% வட்டி மானியம்

    * பயிர் காலம் (குறுகிய/நீண்ட) மற்றும் பயிருக்கான சந்தைப்படுத்தல் காலத்தின்படி திருப்பிச் செலுத்தும் காலம் (repayment period) இருக்கும்.

    * தகுதியுள்ள அனைத்து KCC கடன் வாங்குபவர்களுக்கும் RuPay கார்டுகள் வழங்கப்படும்

    * 45 நாட்களுக்கு ஒருமுறை கார்டை ஆக்டிவேட் செய்தால் RuPay கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை விபத்து காப்பீடு

    தகுதி..

    * பயிர் உற்பத்தி, பண்ணை அல்லாத நடவடிக்கைகள் அல்லது பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு KCCஐப் பெறலாம்

    * விவசாய நிலத்தில் தனிநபர்கள் அல்லது கூட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் விவசாயம் அல்லது தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

    * தனிப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள்

    * குத்தகைதாரர் விவசாயிகள், வாய்வழி குத்தகை, மற்றும் பயிரிடக்கூடிய நிலங்களின் பகிர்ந்த பயிர் செய்பவர்கள்

    வட்டி விகிதம்..

    * 3 லட்சம் வரையிலான கடனுக்கு 7%

    * 3 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் வட்டி விகிதம் பொருந்தும்

    இன்ஷுரன்ஸ்..

    * KCC மூலம் கடன் வாங்கும் 70 வயதுக்குட்பட்டவர்கள் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் (Personal Accident Insurance Scheme)-ன் கீழ் இன்ஷுரன்ஸ் செய்யப்படுவர்.

    * தகுதியான பயிர்கள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னாவின் (PMFBY) கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

    SBI கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி.?

    * https://sbi.co.in/documents/14463/22577/application+form.pdf/24a2171c-9ab5-a4de-08ef-7a5891525cfe என்ற வெப்சைட் முகவரிக்கு சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

    * அப்படி இல்லை என்றால் விவசாயிகள் நேரடியாக SBI பிரான்ச்சிற்கு சென்று KCC அப்பளை செய்வதற்கான அப்ளிகேஷனை கேட்டு பெறலாம்.

    * தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து பிரான்ச்சில் சமர்ப்பிக்க வேண்டும்

    * வங்கி விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து கிரெடிட் கார்டை வழங்கும்.

    மாத சம்பளத்தில் ரூ. 3000 சேமித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

    YONO வழியே KCC-ஐ ரிவ்யூ செய்வது எப்படி.?

    YONO SBI-ல் லாகின் செய்து கொண்டு, YONO Krishi-ஐ கிளிக் செய்யவும். பின் Khata-வை கிளிக் செய்து Kisan Credit Card-ற்கு செல்லவும். பின் அதில் காணப்படும் தனிப்பட்ட விவரங்கள், நில விவரங்கள்,பயிர் விவரங்களை உறுதிப்படுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    தேவைப்படும் ஆவணங்கள்..

    * ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று.

    * விவசாய நிலத்தின் ஆவணங்கள்

    * விண்ணப்பதாரரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

    * வங்கி கேட்கும் பட்சத்தில் போஸ்ட் டேட்டட் செக் (Post Dated Cheque)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி