இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி சம்பளக் கணக்கு, ஜீரோ சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், லோன் எடுத்து இருப்பவர்கள், எஸ்பிஐ வங்கி வழியாக பென்சன் பெறுபவர்கள் அனைவரும் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் டிஜிட்டல் பண மோசடி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தெரியாமல் கூட வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழக்க நேரக்கூடாது என்பதற்காவே எஸ்பிஐ அவ்வப்போது பல முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கி விடுத்திருக்கும் அறிவிப்பில் அறியப்படாத மூலங்களிலிருந்து வரும் செய்திகளில் செயல்பட வேண்டாம் என்றும், அவற்றை செயல்படுத்துவதற்கு முன் அந்த செய்திகளைச் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
pm kisan update : ரூ. 2000 பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 12வது தவணை கிடைக்க இதை செய்ய வேண்டும்
#SafeWithSBI என்ற ஹாஷ்டேக்குடன் எஸ்பிஐ இந்த செய்தியை வாடிக்கையாளர்களுக்காக பகிர்ந்துள்ளது. தேவையின்றி யாருக்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் குறுஞ்செய்தி மூலம் வெளியிட வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது.கணக்கு எண்கள், கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி தெரிவித்துள்ளது. ஃபோன் கால் மூலமாகவோ, மெசேஜ் மூலகமாகவோ வங்கியை சார்ந்திடாத யாரேனும் உங்களிடம் கேட்டால் அதை கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
Link PAN Aadhaar : ஜூலை 1ம் தேதிக்குள் இதை செய்யவில்லை என்றால் ரூ. 500 அபராதம்!
அதே போல் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு “SBI/SB” என்று தொடங்கும் சுருக்குக்குறியீட்டை மட்டும் சரிபார்ப்பதன் மூலம் அவர்களிடமிருந்து செய்தி வந்ததா என்பதைச் சரிபார்க்கவும் வழிகாட்டுகிறது, எ.கா: SBIBNK, SBIINB, SBIPSG, SBYONO.” என்று தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர் அடையாளத்தைப் பெறுவதற்காக ஒருபோதும் மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை அல்லது தொலைபேசி அழைப்புகள் செய்வதில்லை என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.