Home /News /business /

SBI கஸ்டர்ம்ஸ் கூகுளில் இதை தேடவே கூடாதாம்! ஏன்?

SBI கஸ்டர்ம்ஸ் கூகுளில் இதை தேடவே கூடாதாம்! ஏன்?

பிஎஃப் - பான்

பிஎஃப் - பான்

SBI வ்ங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு காரணமாக ஒரு முக்கிய எச்சரிக்கயை விடுத்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்க்காலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி என்றால் அது எஸ்பிஐ தான். இந்த வங்கியில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, சேலரி கணக்கை கொண்டுள்ளனர். அதே போல் வாடிக்கையாளர்கள் சேவையில் அதிக கவனம் செலுத்தும் எஸ்பிஐ வங்கி யோனோ செயலி, யோனோ கேஷ் என்ற பல முக்கிய அம்சங்களையும் செயல்பாட்டில் வைத்துள்ளது. கூடவே அவ்வப்போது ஆஃபர்களையும் வெளியிட்டு வருகிறது.

    சமீபத்தில் கூட பண்டிகைகால சிறப்பு சலுகைகளாக பர்சனல் லோன், கர் லோன்,ஹோம் லோன், டூவீலர் லோன்களில் பல சலுகைகளை அறிவித்தது. இந்நிலையில் வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது என்னவென்றால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கஸ்டமர் கேர் நம்பரை எங்கு தேட வேண்டும் என்பதையும் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் வங்கி நிர்வாகம் விவரித்துள்ளது.

    அவசரத்திற்கு பின் கோடு தேவைப்பட்டாலும் சரி, வாடிக்கையாளர் சேவை எண் வேண்டுமென்றாலும் சரி முதலில் நாம் கூகுளில் தான் தேடுகிறோம். அது பழக்கம் போல் ஆகிவிட்டது. வங்கி தகவல்களை பொறுத்த வரையில் சேவை எண், IFSC code போன்ற பல்வேறு விஷயங்களை கூகுளில் தேடுவது அனைவரும் செய்யும் செயல் தான்.

    இதில் பெரிய ஆபத்து இருக்கிறது சில நேரங்களில் தவறான தகவல்கள் கிடைக்கலாம். இது நமக்கு பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தலாம் . இதை குறிப்பிடும் வகையில்  இனிமேல் எஸ்பிஐ கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேட வேண்டாம்  என்பதை வங்கி நிர்வாகம் நேரடியாக சொல்லாமல் வங்கி வலைத்தளத்தில் பார்க்கும்படி குறிப்பிட்டுள்ளது.



    ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று அதிலிருந்து கஸ்டமர் கேர் நம்பரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது. இதுப்போல் எச்சரிக்கையாக இருப்பது ஆன்லைன் மோசடியில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி