• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எஸ்பிஐ கொடுத்த முக்கிய அறிவிப்பு.. தெரியாம கூட இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க!

எஸ்பிஐ கொடுத்த முக்கிய அறிவிப்பு.. தெரியாம கூட இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க!

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இதுவரை பயன்படுத்தி வந்தால் அதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

  • Share this:
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இனிமேல் அந்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்.

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்கள் சேவையில் எப்போதுமே தனி பெருமைக்கு உரியது. பணப்பரிவர்த்தனையை எளிதாக்குவது, அக்கவுண்ட் ஓபன் செய்வதை சுலபமாக்குவது, மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று வங்கி சேவை வழங்குவது என பல வசதிகளை வாடிக்கையாளர்கள் சேவையில் அறிமுகப்படுத்தி அதை வெற்றிக்கரமாக செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஒரு புதிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதாவது, குறிப்பிட்ட சில மொபைல் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் பறிபோக வாய்ப்பு இருப்பதால் அந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்பு இதுப்போன்ற பிரச்சனை நடந்துள்ளதாம். அதாவது, கடந்த நான்கு மாதங்களில் இதுப்போன்ற செயலிகளால் 150 வாடிக்கையாளர்கள் 70 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.இதனால் தான் இந்த முக்கிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இனியாவது கவனமாய் இருங்கள் மற்றும் எந்த மோசடியிலும் பணத்தை இழக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் AnyDesk, Quick Support, Teamviewer மற்றும் Mingleview செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் இதுவரை பயன்படுத்தி வந்தால் அதிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. போலி எஸ்பிஐ வலைத்தளங்களில் ஏமாற வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    முடிந்த வரை எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்துமாறு அறிவுருத்தியுள்ளது. ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் பிறகு, வங்கி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும் அதை சரிப்பார்த்துக் கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. நீங்களும் இனி கவனமாய் இருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: