• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • sbi-யில் லாபம் தரும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்குவது இவ்வளவு ஈஸியா?

sbi-யில் லாபம் தரும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்குவது இவ்வளவு ஈஸியா?

எஸ்பிஐ சேவிங்க்ஸ்

எஸ்பிஐ சேவிங்க்ஸ்

பயனுள்ள லாபம் தரும் திட்டத்தை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் எப்படி தொடங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

  • Share this:
    நல்ல லாபம் தரக்கூடிய செல்வமகள் சேமிப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கியில் தொடங்குவது ரொம்ப ரொம்ப சுலபம் தெரியுமா?

    சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் கீழான சேமிப்பு ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அக்கவுண்ட்டை எந்த ஒரு அரசு வங்கி அல்லது தபால் நிலையத்திலும் ஆரம்ப டெபாசிட் ரூ .250 உடன் துவக்கலாம். ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 250 ரூபாய் வைப்புத்தொகையை பராமரிக்க வேண்டும், கொரோனா காலத்திலும் செல்வமகள் திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது, இத்திட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.  கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழான மொத்த சேமிப்பு 310 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்த அக்கவுண்ட்டில்டெப்பாசிட் தொகையின் உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை மீறி செலுத்தப்படும் எந்தவொரு டெப்பாசிட் தொகையும் உடனடியாக டெப்பாசிட்டருக்கு திருப்பித் தரப்படும். சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறதும் இவ்வளவு பயனுள்ள லாபம் தரும் திட்டத்தை பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் எப்படி தொடங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

    இந்த லிங்குக்குள் சென்றால் https://sbi.co.in/documents/16012/9067486/01032021_New+forms+of+SSA.pdf/4c7be90c-81fe-9276-6c14-e8bca6cbbe66?t=1614605064573 இந்த திட்டத்திற்கான படிவம் இருக்கும் அதை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் எஸ்பிஐ ஆன்லைன் தளத்திலும் செல்லலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனை சம்பந்தபட்ட எஸ்பிஐ கிளையில் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.அடையாள அட்டையாக பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாக பான் அட்டையும் கொடுத்துக் கொள்ளலாம். அதோடு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.இந்த சேமிப்பில் இருக்கும் பேலன்ஸ் தொகையை எஸ்பிஐயின் நெட் பேங்கிங் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம். இணைய வங்கியிலேயே அதற்கான ஆப்சன் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: