வங்கி vs போஸ்ட் ஆஃபீஸ்.. குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டுமென்றால் நீங்கள் இங்கே செல்வது நான் நல்லது!

குழந்தைகளுக்கான சேமிப்பு

இந்த திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை

  • Share this:
    உங்கள் பிள்ளைகளுக்காக சேமிப்பு திட்டம் தொடங்க இருந்தால் அதற்கு சாரியான இடம் வங்கியா அல்லது போஸ்ட் ஆஃபீஸா என்பதை இங்கே பார்க்கலாம்.

    குழந்தைகளுக்காக இளம் வயதிலேயே சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. பெற்றோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் இதுவும் ஒன்று. உங்கள் சேமிப்பு அவர்களின் வருங்காலத்திற்கு நிச்சயம் கைக்கொடுக்கும். நீங்கள் சேமிக்க வேண்டும் என முடிவு எடுத்துவிட்டால் அதற்கு சிறந்த இடம் வங்கியா அல்லது போஸ்ட் ஆஃபீஸா என பார்க்கலாம். முதலீடு போன்ற நிதி சார்ந்த விஷயங்களை தேர்ந்தெடுக்கும் போது கண்டிப்பாக அதனால் வரும் லாபத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    அந்த வகையில் இன்று பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் இருக்கும் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் சுகன்யா சமர்தி யோஜனா திட்டத்தின் சிறப்புகளை பார்க்கலாம். எஸ்பிஐயில் குழந்தைகளுக்காக ஸ்பெஷல் சேமிப்பு திட்டமான Pehla Kadam என்ற திட்டத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்காக திட்டத்தை தொடங்கலாம். மற்றொரு திட்டமும் உள்ளது Pehli Udaan. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் அவர்களாகவே கணக்கு தொடங்கலாம். பெற்றோர்கள் அவர்களுக்கு வழிக்காட்டலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் 2.7% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு ஏடிஎம் டெபிட் கார்டும் வழங்கப்படும். தினசரி 5000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.மொபைல் பேங்கிங் சேவை உண்டு. தினம் 2000 ரூபாய் வரை அனுப்ப முடியும்.நெட் பேங்கின் வசதி உண்டு. தினசரி 5000 ரூபாய் வரை அனுப்பலாம். கூடவே செக் புக் வழங்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுகன்யா சமர்தி யோஜனா இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கானது. ஒரு பெண் குழந்தை 10 வயது அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்க முடியும். பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், அவர்களின் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்க வேண்டும். அதே போல் பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இத்திட்டத்துக்கான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் இந்த கணக்கை மாற்றம் செய்து கொள்ள முடியும்.இந்த திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: