இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு... எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு... எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்
எஸ்பிஐ
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார பாதிப்பு குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இதுவரை சுமார் 30.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது அரசு அறிவித்துள்ள 21 லட்சம் கோடிா ரூபாய்க்கான பொருளாதார மீட்பு நடவடிக்கையை விட 43 விழுக்காடு அதிகமாகும்.


இதில், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா என 5 பெரிய மாநிலங்களில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48.7 விழுக்காடு அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 4,68,000 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 2,82,000 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.

குஜராத்திலும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை மூன்றுமே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும்.கொரோனாவால் ஜிடிபி வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டில், கணிக்கப்பட்ட 5 விழுக்காடை எட்டாமல் 4.2 விழுக்காடாகவும், வரும் நிதியாண்டில் மைனஸ் 6.8 விழுக்காடாகவும் சரியும் என்றும் எஸ்.பி.ஐ. வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் ஜூன் 20ஆம் தேதிக்கு பின் இந்தியாவில் உச்சத்தை எட்டும் என்றும், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பே கொரோனா பரவுவது குறையும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.


Also see...
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading