எஸ்பிஐ ஓய்வூதிய சேவை: இனி ஒரே கிளிக்கில் ஓய்வூதிய அப்டேட்டுகளை பெறலாம்!
எஸ்பிஐ ஓய்வூதிய சேவை: இனி ஒரே கிளிக்கில் ஓய்வூதிய அப்டேட்டுகளை பெறலாம்!
(கோப்புப்படம்)
ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எப்போதுமே நவம்பர் 30 ஆகும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஜீவன் பிரமன் பத்ராவை வழங்க கூடுதல் அவகாசத்தை வழங்க மையம் முடிவு செய்துள்ளது.
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால், அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் அந்தந்த வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், எஸ்பிஐ ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமன் பத்ராவை எந்தவொரு வங்கி கிளைகளிலோ அல்லது ஆன்லைனிலோ டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நான்கு வழிகள் உள்ளன. அவை, கையேடு சமர்ப்பிப்பு, எஸ்பிஐ வங்கி கிளையில் டிஜிட்டல் சமர்ப்பிப்பு, UMANG ஆப் மூலம் ஆன்லைனில் சமர்ப்பித்தல், குடிமக்கள் சேவை மையங்கள் (சிஎஸ்சி) அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஆதார் சேவை மையங்களை பார்வையிடுவதன் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
இந்த நிலையில், வங்கியில் ஓய்வூதியக் கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியதாரர்களுக்காக (ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் தவிர) எஸ்பிஐ சமீபத்தில் ‘எஸ்பிஐ பென்சன் சேவா’ என்ற ஒரு பிரத்யேக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. பொது ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டது. எஸ்பிஐ ஓய்வூதிய சேவை வலைத்தளத்தில் எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுவோர் உள்நுழைந்து அவர்களின் ஓய்வூதிய தொடர்பான விவரங்களை உடனடியாக சரிபார்த்துக்கொள்ளலாம்.
இணையதளத்தில் கிடைக்கும் சேவைகள்:
* நிலுவை கணக்கீட்டு தாள்களின் பதிவிறக்கம்
* ஓய்வூதியம் மற்றும் படிவம் 16 பதிவிறக்கம்
* ஓய்வூதிய சுயவிவர விவரங்கள்
* முதலீடு தொடர்பான விவரங்கள்
* வாழ்க்கை சான்றிதழ் நிலை
* பரிவர்த்தனை விவரங்கள்
ஓய்வூதியதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட நன்மைகள்:
* ஓய்வூதிய கட்டண விவரங்களுடன் மொபைல் தொலைபேசியில் எஸ்எம்எஸ் எச்சரிக்கை கொடுக்கப்படும்.
* மின்னஞ்சல் அல்லது ஓய்வூதியம் செலுத்தும் கிளை மூலம் ஓய்வூதிய சீட்டு வழங்குதல்.
* ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி.
* அனைத்து கிளைகளிலும் ஜீவன் பிரமன் வசதி.
* மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
* பாதுகாப்பு / ரயில்வே / சிபிஓஓ / ராஜஸ்தான் ஓய்வூதியதாரர்களுக்கு ஈபிபிஓ ஏற்பாடு ஆகியவை ஆகும்.
குறிப்பு: கடவுச்சொற்கள் குறைந்தபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். கடவுச்சொற்களில் பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களை குறிக்க வேண்டும்.
* பிறகு 2 சுயவிவர கேள்விகள் மற்றும் பதில்களைத் தேர்ந்தெடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும், ஏனெனில் நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அது தேவைப்படும்.
* வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர், உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்படும். அதில் உங்கள் கணக்கை செயல்படுத்த ஒரு இணைப்பு கிடைக்கும்.
* அந்த இணைப்பில் சென்று , ஓய்வூதியதாரர் தனது பதிவு செய்யப்பட்ட ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைய முடியும்.
குறிப்பு: தொடர்ச்சியாக மூன்று தோல்வியுற்ற உள்நுழைவு முயற்சிகளுக்குப் பிறகு பயனர் கணக்கு தானாகவே பூட்டப்படும்.
* ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எப்போதுமே நவம்பர் 30 ஆகும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஜீவன் பிரமன் பத்ராவை வழங்க கூடுதல் அவகாசத்தை வழங்க மையம் முடிவு செய்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.