உங்கள் பிள்ளைகளின் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு.. பென்சன் லோன் பற்றி தெரியுமா?

எஸ்பிஐ பென்சன் லோன்

பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் எஸ்பிஐ வங்கியில் இருந்தால் போதும் நீங்கள் இந்த லோனை பெறலாம்.

  • Share this:
    நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருக்கும் பென்சன் லோன் பற்றி தெரியுமா?

    எஸ்பிஐயில், ஓய்வு பெற்ற ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பாட்டில் இருக்கும் ஒரு கடன் வசதி தான் பென்சன் லோன். இந்த கடன் வசதியை 9.75 சதவீத வட்டி விகிதத்தில் எஸ்பிஐ வழங்குகிறது. உங்கள் பிள்ளைகளின் கனவை நனவாக்க பெற்றோர்கள் இந்த கடன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மருத்துவ செலவுக்கு இது பயன்படும்.

    குறைந்தபட்சம் ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். எஸ்பிஐயின் எந்தவொரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்.நீங்கள் பென்சன் லோனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால் 1800-11-2211 எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரிக்கலாம். ஓய்வூதியதாரரின் வயது 76 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும், பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் எஸ்பிஐ வங்கியில் இருந்தால் போதும் நீங்கள் இந்த லோனை பெற முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு லோன் திட்டம் ஆகும். எஸ்பிஐயில் இருக்கும் இந்த லோன் திட்டத்தை பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் டோல் ஃப்ரீ எண்ணுக்கு தொடர்பு கொண்டு அல்லது அருகில் இருக்கும் வங்கிக்கு சென்றும் இந்த லோன் குறித்து விசாரித்து கடன் பெறுவது குறித்து திட்டமிடலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: