இந்த விஷயத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் லக்கி தான்.. ஏன் தெரியுமா?

எஸ்பிஐ வங்கி

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவர்கள் எஸ்பிஐ ஹோம் லோனில் இந்த சிறப்பு சலுகையை பெற தகுதியுடையவர்கள்

 • Share this:
  பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் செயலாக்க கட்டணம் இல்லாமல் ஹோம் லோன் பெறலாம் தெரியுமா?

  சொந்த வீடு கனவு இல்லாத மிடில் கிளாஸ் மக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சொந்த வீடு ஆசை என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ஏன் கேட்கிறீர்களா? அவர்கள் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை செயலாக்க கட்டணம் இல்லாமல் ஹோம் லோன் பெற முடியும் தெரியுமா? ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவர்கள் எஸ்பிஐ ஹோம் லோனில் இந்த சிறப்பு சலுகையை பெற தகுதியுடையவர்கள் ஆவர்கள்.

  எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் அல்லது 7208933140 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு homeloans.sbi வலைத்தளத்திற்கு செல்லவும். அதே போல் இந்த யோனோ ஆப்பை பதிவிறக்கம் செய்யாதவர்கள் அதை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே இந்த சலுகைக்கு அப்ளை செய்ய முடியும். கூடுதல் விவரங்களுக்கு 1800 11 2018 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

  கம்மியான வட்டியில் லோன் தரும் வங்கிகள்.. தெரிஞ்சி வச்சிக்கோங்க யூஸ் ஆகும்!

  நேரத்தை வீணாடிக்கமால் உடனே இந்த வாய்ப்பை பெறுங்கள். எஸ்பிஐ ஹோம் லோனில் குறைந்த வட்டி சலுகையும் உள்ளது. சொந்த வீடு என்ற உங்களின் கனவு நனவாக இதுப்போன்ற சலுகைகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதுமட்டுமில்லை செயலாக்க கட்டணம் இல்லாமல் லோன் பெறுவது என்பது உங்கள் சேமிப்பை மேலும் பலப்படுத்தும். உங்களுக்கு தேவைப்படும் தொகை முழுமையாக உங்கள் கையில் கிடைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: