Home /News /business /

எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருந்தும் இந்த வசதியை பெற முடியவில்லையா? இதோ அதற்கான வழி!

எஸ்பிஐயில் அக்கவுண்ட் இருந்தும் இந்த வசதியை பெற முடியவில்லையா? இதோ அதற்கான வழி!

எஸ்பிஐ

எஸ்பிஐ

உங்களின் ATM Card குறித்த தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.

    எஸ்பிஐயில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பலருக்கும் இந்த தகவல் பயன்படும். யூஸ் பண்ணிக்கோங்க.

    எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் இருக்கு. ஆனால் இப்போது வரை வங்கியின் நெட் பேக்கிங் வசதியை பயன்படுத்த முடியவில்லை அல்லது தொடங்கவில்லை என தவிக்கிறீர்கள். கவலை வேண்டாம் அதுக் குறித்து இன்றே தெரிந்து கொள்ளலாம். வாருங்கள். அதிகம் படிக்காதவர்கள் அல்லது ஆன்லைனில் இதுக் குறித்து செய்ய குழப்பம் இருப்பவர்கள் இந்த படிகளை பின்பற்றினாலே போதும் ஈஸியாக எஸ்பிஐ நெட் பேக்கிங்கை ஓபன் செய்து கொள்ளலாம்.

    இதோ அதற்கான படிகள். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் நெட் பேக்கிங் ஓபன் செய்ய முதலில் https://retail.onlinesbi.com/retail/userdrivenregdetails.htm வங்கியின் இந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இதில் New User என்ற விருப்ப தேர்வை கிளிக் செய்து Next பட்டனை கிளிக் செய்யவும். பின்பு, அதில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை நிரப்பவும். இதில் Account Number, CIF Number,Branch Code வங்கியில் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதை சரியாக நிரப்ப வேண்டும்.

    அடுத்தது, Facility Required என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்து பின்பு Submit கொடுக்க வேண்டும். இப்போது வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அந்த நம்பரை இங்கே பதிவு செய்து Confirm பட்டனை கிளிக் செய்யவும். இப்போது ஒரு திரை தோன்றும். அதில் I have ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் ATM Card குறித்த தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.



    பின்பு Username மற்றும் Password போன்றவற்றை கொடுக்க வேண்டும்.இறுதியாக i accept the Terms and Conditions என்பதை டிக் செய்து Submit கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் முடிந்தது. இப்போது நீங்கள் எஸ்பிஐ வங்கியின் நெட் பேக்கிங்கை ஓபன் செய்து விட்டீர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி