நாட்டின் மிகப்பெரும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதன் வாடிக்கையாளர்களின் கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி புதிய திட்டத்தை அறிவித்துள்ள எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம், கடனுக்கான இ.எம்.ஐ. தவணைகளுக்கு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது.
இதனை பெறுபவர்கள் தங்களின் கடன் வட்டி விகிதத்துக்கு மேல் 0.35 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார இழப்புக்கு ஆதாரம் காட்டினால் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ள வங்கி, ஆகஸ்ட் மாத வருமானம், கடந்த பிப்ரவரி மாதத்தை விட குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வீடு, கல்வி, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கும் மறுசீரமைப்புத் திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி இணையதளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள வங்கி நிர்வாகம், விண்ணப்பத்துக்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 24 எனவும் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு கடன் வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தால் பலன்பெற முடியாது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.