• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எஸ்பிஐ Yono ஆப் வழங்கும் ப்ரீ-அப்ரூவ்ட் இரண்டு சக்கர வாகனக் கடன்!

எஸ்பிஐ Yono ஆப் வழங்கும் ப்ரீ-அப்ரூவ்ட் இரண்டு சக்கர வாகனக் கடன்!

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

இந்த பொதுத்துறை நிறுவனம், ஏற்கனவே ஆன்லைன் அல்லது YONO ஆப் வழியாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 5 புள்ளிகள் என்ற அடிப்படையில் தள்ளுபடி வழங்குகிறது.

  • Share this:
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புத்தம் புதிய பைக்குகள் மற்றும் கார்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ஒரு சிலர் ஏற்கனவே புதிய வாகனங்களை வாங்கத் திட்டம் போட்டு, அதற்கான பணத்தையும் தயாராக வைத்திருப்பார்கள். ஆனால், சிலருக்கு உடனடியாக பணம் திரட்ட முடியாமல் போகும் சூழலும் உள்ளது. இதற்காக, SBI வங்கி, 'ஈசி ரைடு' என்ற முன்கூட்டியே அப்ரூவ் செய்யபப்ட்ட இரண்டு சக்கர வாகனக் கடன்களை வழங்குகிறது. இதைப் பற்றி முழுவதுமாக இங்கே பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி தனது Yono செயலியின் வழியாக, ப்ரீ-அப்ரூவ் செய்யப்பட்ட டூ-வீலர் லோன்களை வழங்கியுள்ளது. 'Easy ride' என்ற ஆப்ஷன் வழியாக 3 லட்ச ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் இரண்டு சக்கர வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்ச கடன் தொகையாக ரூ. 20,000 மற்றும் கடனுக்கான காலம் நான்கு ஆண்டுகள் எனவும், கடன் வட்டி 10.5% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI YONO என்ற டிஜிட்டல் தளத்தை வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக, Yono செயலியில் இந்த ப்ரீ-அப்ரூவ்ட் கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. SBI வாடிக்கையாளர்கள், YONO செயலியைப் பயன்படுத்தி, ஆன்லைனிலேயே டூவீலர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பொதுத்துறை நிறுவனம், ஏற்கனவே ஆன்லைன் அல்லது YONO ஆப் வழியாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 5 புள்ளிகள் என்ற அடிப்படையில் தள்ளுபடி வழங்குகிறது. அதே போல, லோன் பெற தகுதியுள்ள அனைத்து SBI வாடிக்கையாளர்களும், வங்கிக் கிளைகளை அணுகாமல், YONO செயலி வழியாகவே டூ-வீலர் கடன் பெறலாம் என்று வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ப்ரீ-அப்ரூவ்டு இரண்டு சக்கர வாகனக் கடன்கள் பற்றிய விவரங்கள்:

அதிகபட்ச கடன் தொகை - 3 லட்ச ரூபாய்

குறைந்தபட்ச கடன் தொகை - ரூ. 20,000

கடனுக்கான வட்டி - 10.5%

கடன் வழங்கப்படும் காலம் - 4 ஆண்டுகள்

EMI தொகை - ஒரு லட்சத்துக்கு ரூ. 2,560

வாகனத்தின் ஆன்-ரோடு மதிப்பில், 85 சதவிகித தொகையை கடன் வழியாகப் பெறலாம். கடன் தொகை நேரடியாக வாகன டீலரின் கணக்கில் செலுத்தப்படும்.

இரண்டு சக்கர வாகனங்களுக்கான கடன்கள் மட்டுமின்றி, கார்களுக்கும் SBI வங்கி வாகனக் கடன்களை வழங்குகிறது. கார் லோனின் EMI, ஒரு லட்சத்துக்கு ரூ. 1,539 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, தனது ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு புதிய சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது எஸ்பிஐ. நீங்கள் வாகனக் கடன் வாங்க வேண்டுமென்றால், SBI வங்கியின் அதிகாரபூர்வமான இணையதளத்தமான sbi.co.in-ல் லாகின் செய்து தகவல்களைப் பெறலாம்.

Also read... பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பதிலாக எந்த பைக்குகள் வாங்கலாம்!

மேற்கூறிய கடன்கள் மட்டுமின்றி, கோல்டு லோன் மற்றும் பெர்சனல் லோன் ஆகியவற்றையும் SBI வழங்குகிறது. ஆனால், இந்த லோன்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்க SBI YONO செயலியை பயன்படுத்த வேண்டும். sbiyono.sbi என்ற இணைப்பில் லாகின் செய்து நீங்கள் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

இந்த லோன் சலுகைகளைப் பற்றிய கடந்த மாதமே, டிவிட்டரின் எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது. "பண்டிகைக் காலத்தை, SBI வழங்கும் கார் லோன், கோல்டு லோன், மற்றும் பெர்ஷனல் லோன் மீது வழங்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்களுடன் கொண்டாடுங்கள். sbiyono.sbi இல் இப்போதே விண்ணப்பியுங்கள்!"

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: