Home /News /business /

6.8% வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் எஸ்பிஐ - மார்ச் 2021 வரை ப்ராசஸிங் கட்டணமும் இல்லை!

6.8% வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் எஸ்பிஐ - மார்ச் 2021 வரை ப்ராசஸிங் கட்டணமும் இல்லை!

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

வீட்டுக் கடன் வணிகம் மற்றும் வங்கியின் பிற வணிகங்களை வேகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய AI, கிளவுட், பிளாக்செயின், மெஷின் லேர்னிங் ஆகியவற்றை செயல்படுத்தவும் SBI இப்போது திட்டமிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
இந்தியாவில் வாழும் கோடிக் கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை/லட்சியம்/கனவு... இருக்கும். அப்படித் தான் நம் சமூகம் நம்மை வளர்த்து இருக்கிறது. "சொந்த வீடு இல்லிங்களா" என்கிற கேள்வி  நம்மில் பலரை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாதம் 5,000 ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியாத நம்மால், எப்படி 50 லட்சத்துக்கு வீடு பார்க்க முடியும். ஆக நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்க ஒரே வழி வீட்டுக் கடன் தான். 

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக அவ்வப்போது சிறப்புச் சலுகைகளையும் வட்டிக் குறைப்பையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 10, புதன்கிழமை அன்று , ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வீட்டுவசதிகளை மலிவுபடுத்துவதற்காக ஆண்டுக்கு 6.80 சதவிகிதம் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன்களை வழங்க முடிவு செய்தது. 

SBIன் -அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் வீட்டுக் கடன்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கி 2021 மார்ச் வரை ப்ரோசஸிங் பீஸையும் முற்றிலுமாக தள்ளுபடி செய்துள்ளது. வீட்டுக் கடன் பிரிவில், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் SBI வங்கி 34 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு தோராயமாக 1,000 பேராவது வீட்டுக் கடன்களை கேட்டு SBI வங்கிக்கு செல்கின்றனர். கடன்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகுவதற்காக வேறு சில ஈஸியான விஷயங்களையும் குறிப்பாக வீட்டுக் கடன் வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக் கடன் ப்ராசஸ்களை எளிதாக்குதல் மற்றும் வீட்டுக் கடனை தேடும் வாடிக்கையாளர்களுடனான பிந்தைய பங்களிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டே வருவதாக SBI தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (PMAY) மானியத்தை செயலாக்க மத்திய நோடல் ஏஜென்சியாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நியமித்த ஒரே வங்கி SBI என்பதால், டிசம்பர் 2020 வரை, SBI வங்கி 1,94,582 வீட்டுக் கடன்களை PMAY.SBI இன் கீழ் அனுமதித்துள்ளது. நேற்று அதாவது பிப்ரவரி 10ம் தேதி SBI வெளியிட்டுள்ள அறிக்கையில், '2022 க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி' (‘Housing for all by 2022’) என்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டத்தை சப்போர்ட் செய்வதற்காக PMAYயின் கீழ் தொடர்ந்து வீட்டுக் கடன்களை நீட்டித்து வருவதாக வாங்கி தெரிவித்துள்ளது. 

Also read... Gold Rate: உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

வீட்டுக் கடன் வணிகம் மற்றும் வங்கியின் பிற வணிகங்களை வேகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய AI, கிளவுட், பிளாக்செயின், மெஷின் லேர்னிங் ஆகியவற்றை செயல்படுத்தவும் SBI இப்போது திட்டமிட்டுள்ளது. வீட்டுக் கடன்களுக்கான இணை கடன் வழங்கும் மாதிரியைத் தொடங்க வங்கி தயாராகி வருவதாகவும், இது அமைப்புசாரா துறையில் SBIன் கால்தடங்களை உயர்த்த உதவும் என்றும் வங்கி மேலும் கூறியது. வீட்டுக் கடன் பொறுத்தவரையில், 215 சென்டர்களில் மத்திய செயலாக்க மையங்களுக்கு (Central Processing Centers - CPC) அர்ப்பணிக்கப்பட்ட கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம், பரந்த கிளைகளின் நெட்வொர்க், வங்கியின் டிஜிட்டல் மற்றும் லைப்ஸ்டைல் பிளாட்பார்ம், YONO உட்பட பலவற்றின் மூலம் SBI இப்போது ரூ .5 டிரில்லியன் மதிப்பெண்களை எட்டியுள்ளதாம். 

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த SBIன் தலைவர் தினேஷ் காரா, இது ஒரு முக்கியமான சாதனை என்றும், இந்த அசாதாரண சாதனை வாடிக்கையாளர்களின் வங்கியின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும் என்றும் கூறினார். வீட்டுக் கடன் விநியோகத்தில் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளில் வங்கி செயல்பட்டு வருவதாகவும், மேலும் ஒரு தனித்துவமான ஒருங்கிணைந்த தளமான சில்லறை கடன் மேலாண்மை அமைப்பு (Retail Loan Management System (RLMS)) உட்பட, முழுமையான டிஜிட்டல் தீர்வை SBI வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். SBI வங்கியைப் பொறுத்தவரையில், தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து வட்டிக் குறைப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்த செய்தி உண்மையில் பலருக்கும் பயனளிக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: SBI, SBI Loan

அடுத்த செய்தி