எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு பலரும் தவறான வழிகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். அதிக வட்டி, குறைந்த காலத்தில் அதிக பணம் கிடைக்கும் என கூறப்படும் ஆசை வார்த்தைகளை நம்பும் ஏழை மக்கள், குடும்ப ஏழ்மையை போக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த வார்த்தைகளுக்கு பலியாகின்றனர். கடைசியில் கொடுத்த பணம் கூட கிடைக்காத நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது.
எஸ்.பி.ஐ வங்கியைப் பொறுத்த வரையில் டெபாசிட்டுக்கு என சில வருடாந்திர திட்டங்களை வைத்துள்ளது. குறைந்தபட்சம் மாதம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் இங்கே பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ வருடாந்திர திட்டம்
ஏற்கனவே கூறியதுபோல்
எஸ்.பி.ஐ பல்வேறு வருடாந்திர திட்டங்களை வைத்துள்ளது. 36, 60, 84 அல்லது 120 மாதங்கள் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
நீங்கள் எந்த திட்டத்தை தேர்தெடுத்தாலும் டெபாசிட்டுக்கு கிடைக்கக்கூடிய வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது. 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை நீங்கள் தேர்தெடுக்கிறீர்கள் என்றால், 10 ஆண்டுகளுக்கு உரிய வட்டி விகிதம் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும்.
ALSO READ | இந்தியாவில் கடன் சேவைகளை வழங்கும் ஆட்டோ நிதி வணிகத்தில் இருந்து வெளியேறும் Volkswagen மற்றும் Ford!
மாதம் ரூ.10, 000 பெறுவது எப்படி?
உங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி வேண்டும் என்றால் நீங்கள் ரூ. 5,07, 964 வைப்புத் தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு 7 விழுக்காடு வட்டி கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மெச்சூரிட்டி காலத்திற்கு பிறகு, மாதம் உங்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும்.
ALSO READ | இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் - அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
முதலீடு செய்ய வழிமுறைகள் என்ன?
எஸ்.பி.ஐ வங்கியின் வருடாந்திர திட்டத்தைப் பொறுத்த வரை மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதற்கு எந்த வரைமுறையும் இல்லை. வருடாந்திர திட்டத்தைப் பொறுத்த வரை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வாடிக்கையாளர் அந்த தொகையை செலுத்திவிட்டார் என்றால், அதன்பிறகு வங்கியில் இருந்து வட்டி கிடைக்கும்.
ALSO READ | 80 % ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. Wipro நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
RD (ரெக்கரிங் டெபாசிட்) vs வருடாந்திர திட்டம்
வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யுமளவுக்கு நடுத்தர மக்களிடம் அவ்வளவு பணம் இருக்காது. அப்படியான நிலையில் இருக்கும் மக்கள், தங்களின் எதிர்கால தேவையைக் கருதில் கொண்டு ரெக்கரிங்
டெபாசிட் திட்டத்தை தேர்தெடுக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
மாதந்தோறும் குறைந்த முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப முதலீட்டாளருக்கு
எஸ்.பி.ஐ வங்கி வட்டி கொடுக்கிறது. முதலீட்டு பணத்துக்கு உத்தரவாதம் இருப்பதால், மக்கள் இந்த திட்டங்களை தேர்தெடுப்பது நல்லது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.