எஸ்பிஐ அப்டேட்.. வாடிக்கையாளர்கள் ஆதாரை இணைக்கவில்லையென்றால் இந்த வசதி கிடைக்காது!

எஸ்பிஐ அப்டேட்

இந்திய அரசிடம் இருந்து DBT மூலம் சலுகைகளை பெற விரும்புவோர் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும்

 • Share this:
  எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த தகவலை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவரை செய்து முடிக்காதவர்கள் வரும் நாட்களில் மறக்காமல் செய்துவிடுங்கள்.

  அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இது அனைத்து வங்கிகளிலும் இருக்கும் பொதுவான விதிமுறை ஆகும். இந்த விதிமுறையை தான் எஸ்பிஐ வங்கி மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டுகிறது. இதுவரை வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்கள் அதனை உடனே செய்து முடிக்குமாறு கூறியுள்ளது. நீங்கள் இணைத்துவிட்டீர்களா?

  ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டம் (DBT)குறித்து அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறோம். குறிப்பாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதுக் குறித்து நன்கு அறிவார்கள். இந்த திட்டத்தில் அரசு வழங்கும் சலுகைகளை பெறலாம். ஆனால் இந்த சலுகைகளை பெற வேண்டும் என்றால் கண்டிபாக வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்திருக்க வேண்டும். இந்திய அரசிடம் இருந்து DBT மூலம் சலுகைகளை பெற விரும்புவோர் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை தான் எஸ்பிஐ நினைவூட்டுகிறது.

  மாதம் ரூ.30,000 பென்சன் வேண்டுமா? மாதம் ரூ.150 சேமிக்க தொடங்குங்கள் போதும்!


  நேரடியாக வங்கிக் கிளைக்கே சென்று ஆதார் கார்டை இணைத்துவிடலாம் அல்லது ஆன்லைனிலும் செய்து முடிக்கலாம். www.onlinesbi.com இணையதளத்தில் உங்கள் கணக்குக்குள் log in செய்ய வேண்டும். அதில் My accounts பிரிவை கிளிக் செய்து 'Link your aadhaar number' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டு பின் நம்பர் பதிவு செய்து அதிலும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கலாம். இதுவரை செய்யாதவர்கள் 2 நாட்கள் விடுமுறையில் செய்து முடித்துவிடுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: