வீட்டுக் கடன் மீதான வட்டியை குறைத்த எஸ்பிஐ; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

எதிர்காலத்தில் ரெப்போ ரேட் விகிதம் குறைந்தால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 8, 2019, 8:51 PM IST
வீட்டுக் கடன் மீதான வட்டியை குறைத்த எஸ்பிஐ; வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
எஸ்பிஐ
Web Desk | news18
Updated: June 8, 2019, 8:51 PM IST
ரெப்போ ரேட் மாற்றத்திற்கு ஏற்ப வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக ரெப்போ ரேட் எனப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைத்தது.

அதேசமயம், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ரெப்போ ரேட் விகித மாற்றத்திற்கு ஏற்ப வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலக்கு வர உள்ளது. எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 8 புள்ளி ஐந்து ஐந்து சதவீதமாக உள்ளது.

தற்போது ரெப்போ ரேட் குறைப்புக்கு ஏற்ப வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.40 சதவீதமாக குறைக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ரெப்போ ரேட் விகிதம் குறைந்தால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்று தெர்வித்துள்ளது.

மேலும் எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகள் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகல் மீதான வட்டி விகிதமும் 3.25 சதவீதத்தில் இருந்து விரைவில் 3 சதவீதமாக எஸ்பிஐ குறைத்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...