Home /News /business /

SBI LOAN : இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது! லோன் தேவை உள்ளவர்கள் யூஸ் பண்ணிக்கோங்க

SBI LOAN : இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது! லோன் தேவை உள்ளவர்கள் யூஸ் பண்ணிக்கோங்க

எஸ்பிஐ லோன்

எஸ்பிஐ லோன்

எஸ்பிஐயில் கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் ரத்து. எனவே லோன் தேவை உள்ளவர்கள் வேகமாக இதற்கான முயற்சிகளை எடுங்கள்.

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு சிறப்பான லோன் ஆஃபரை வெளியிட்டுள்ளது. லோன் தேவை உள்ளவர்கள் கண்டிப்பாக் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    உங்களுக்கு மாதாமாதம் தவணையை செலுத்தக்கூடிய அளவுக்கு வருமானம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் பர்சனல் லோனுக்கு தாரளமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
    கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உங்களிடம் உள்ளதா என்பதையும் கடன் வழங்கும் வங்கிகள் தீர்மானித்த பின்பே கடனை வழங்கும். கூடவே முகவரி மற்றும் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் மிகவும் அவசியம். பான் கார்டு தகவலைப் பயன்படுத்தி உங்களின் கடந்தகால கடன் பதிவுகளும் சரிபார்க்கப்படும். இப்படி பர்சனல் லோன் வாங்க பல படிகள் பின்பற்றப்படுகின்றன.

    ஆனால் எஸ்பிஐ வங்கி தற்போது மிகவும் எளிய முறைய பர்சனல் லோன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. . இத்திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். அதோடு, செயல்பாட்டுக் கட்டணமும் இதற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வட்டி விவரம்:

    இந்த லோனுக்கு 9.60 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக இதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.அதே போல் 567676 என்ற நம்பருக்கு SMS அனுப்பி லோன் தேவை பற்றி தகவல் தெரிவிக்கவும் எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. 2022 ஜனவரி 31ஆம் தேதிக்குள் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே முக்கியமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவர்களுக்கு மட்டுமே கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் ரத்து. எனவே லோன் தேவை உள்ளவர்கL வேகமாக இதற்கான முயற்சிகளை எடுங்கள்.

    ஆதார் கார்டு: 10 முக்கிய சந்தேகங்களும் விளக்கங்களும்!

    அதே நேரம் எல்லோருக்கும் இந்த சலுகையில் கடன் கிடைக்குமா? என்றால் அது சந்தேகம் தான். சில விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று கிரெடிட் ஸ்கோர். இதை வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியை அணுகவும் அல்லது ஆன்லைன் தளத்தில் பார்க்கவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி