Home /News /business /

சொந்த வீடு கனவை நனவாக்க எஸ்பிஐ வாய்ப்பு தருகிறது.. யூஸ் பண்ணிக்கோங்க!

சொந்த வீடு கனவை நனவாக்க எஸ்பிஐ வாய்ப்பு தருகிறது.. யூஸ் பண்ணிக்கோங்க!

எஸ்பிஐ லோன்

எஸ்பிஐ லோன்

அடுத்த ஆண்டில் சொந்த வீட்டில் குடி போக வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ தரும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களின் நீண்ட நாள் ஆசையான சொந்த வீடு கனவை எஸ்பிஐ மூலம் நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. யூஸ் பண்ணிக்கோங்க.

    சொந்த வீடு இன்று வரை பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. அதிலும் மிடில் கிளாஸ் மக்களை எடுத்து கொண்டால் அவர்களின் மிகப் பெரிய கனவு எது என்று கேட்டால் சொந்தமாக ஒரு வீடு என்று தான் சொல்வார்கள். வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பாருன்னு சும்மாவா சொன்னாங்க. வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கிடைக்கும் ஹோம் லோன்களை நம்பி தான் வீடு விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். ஒரே நேரத்தில் மிகப் பெரிய தொகையை நீட்டுவது என்பது எளிதான காரியம் இல்லை. பாதி பணம் இருந்தால் மீதி பணம் பேங்கில் லோன் போட்டு எளிதில் களத்தில் இறங்கலாம். அப்படி வங்கியில் லோன் எடுக்கும் பணம் குறைந்த வட்டியில் கிடைத்தால் அதை விட சந்தோஷம் வேறென்ன இருக்க போது. அப்படி ஒரு வாய்ப்பு தான் இப்போது எஸ்பிஐ வழங்குகிறது. யூஸ் பண்ணிக்கோங்க.

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த வட்டி விகிதம் ஆகும். அதுமட்டுமில்லை சம்பளம் பெறும் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கு என வீட்டுக்கடனில் பல சலுகைகளை வழங்குகிறது அதுக்குறித்து பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு முன்பு இருந்த ரூல்ஸ் என்னவென்றால் ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் வாங்கினால் 7.15 சதவீத வட்டி செலுத்த வேண்டும் . ஆனால் தற்போது ரூ. 75 லட்சதுக்கு மேல் கடன் வாங்கினாலும் நீங்கள் 6.70 சதவீத வட்டி செலுத்தினால் போதும்.
    சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் இதே வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்பது கூடுதல் தகவல். மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால் இந்த வீட்டுக்கடனுக்கான செயல்பாட்டு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதே போல் சம்பளம் பெறும் ஊழியர்கள், மற்ற பிரிவினர் என அனைவருக்குமே 6.70 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் சொந்த வீட்டில் குடி போக வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ தரும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: SBI

    அடுத்த செய்தி