Home /News /business /

ரூ.35 லட்சம் வரை பர்சனல் லோன்... எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்! 

ரூ.35 லட்சம் வரை பர்சனல் லோன்... எஸ்பிஐ தரும் இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்! 

எஸ்பிஐ லோன்

எஸ்பிஐ லோன்

பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்க SBI வங்கியின் கிளைகளுக்கு செல்ல வேண்டியதில்லை.

    இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI,) சமீபத்தில் அதன் யோனோ ஆப்-ல் (YONO app) ஃபிளாக்ஷிப் பர்சனல் லோன் ப்ராடக்ட்டான ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை (Real Time Xpress Credit - RTXC) அறிமுகப்படுத்தி உள்ளது. தகுதியுடைய வாடிக்கையாளர்கள் இப்போது YONO மூலம் ரூ..35 லட்சம் வரையிலான தனிநபர் கடனைப் பெற முடியும் என்று SBI தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதையும் டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாக கொண்டது. அவர்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்க SBI வங்கியின் கிளைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் என்பது சேலரி அக்கவுண்ட் கொண்ட சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கான வங்கியின் தனிப்பட்ட லோன் ப்ராடக்ட் ஆகும்.

    இதையும் படிங்க.. SBI : கல்லூரியில் படிக்க ரூ. 50 லட்சம் வரை லோன் தரும் ஸ்டேட் பேங்க்! அப்ளை செய்யும் முறை

    இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி அவர்களுக்கு கூடுதல் வசதியை வழங்கும் நோக்கத்துடன், YONO app-ல் RTXC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம் என SBI தெரிவித்துள்ளது. சமீபத்திய ட்விட்டில் SBI கூறி இருப்பதாவது, " உங்கள் கனவுகளுக்கு ஆம் என்று சொல்லுங்கள்!.. எங்கள் தகுதிவாய்ந்த சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை (RTXC) அறிமுகப்படுத்துகிறோம். Yono app-ல் இப்போது ரூ.35 லட்சம் வரை எளிதான மற்றும் உடனடி லோன் பெற்று கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.



    வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்து YONO ஆப் மூலம் RTXC சர்விசை எளிதில் பெறலாம். இது 100 சதவீதம் பேப்பர்லெஸ் மற்றும் டிஜிட்டல் முறையில் இருக்கும். இந்த என்ட்-டூ-என்ட் 8 ஸ்டெப் ஜர்னி வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மற்றும் உடனடியாக கிடைக்கும். இந்த புதிய வசதி மூலம் தகுதி, கிரெடிட் காசோலைகள், ஆவணங்கள் மற்றும் பிற செயல்முறைகள் முற்றிலும் டிஜிட்டல் முறையிலும் ரியல் டைமில் செய்யப்படும் என்றும் SBI கூறி இருக்கிறது. RTXC-ன் கீழ் SBI-யின் மத்திய அல்லது மாநில அரசு மற்றும் டிஃபென்ஸ் துறையில் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் இனி பர்சனல் லோனை பெற வங்கி கிளைக்கு செல்ல வேண்டியதில்லை. மேற்காணும் சேவைகள் இப்போது ரியல் டைமில் டிஜிட்டல் முறையில் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!

    RTXC பெறுவதற்கான தகுதி..

    ஏற்கனவே குறிப்பிடப்படி ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டின் கீழ்,மத்திய அல்லது மாநில அரசு மற்றும் பாதுகாப்பு துறையில் ஊதியம் பெறும் SBI வாடிக்கையாளர்கள் இந்த கடன்களை பெற முடியும்.

    * SBI -யில் சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்

    * அவர்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.15,000 இருக்க வேண்டும்

    * மத்திய/மாநில/quasi அரசு, மத்திய பொதுத்துறை நிறுவனம் மற்றும் லாபம் ஈட்டும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தேசிய புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், வங்கியுடன் அல்லது தொடர்பு இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட்டுகளில் பணிபுரியும் ஊழியர்கள் RTXC வசதியை பயன்படுத்தலாம்.

    SBI தலைவர் தினேஷ் காரா பேசுகையில், “தகுதியான சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு RTXC கடன் வசதியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத மற்றும் காகிதமில்லா கடன் செயல்முறையை டிஜிட்டலில் அனுபவிக்க உதவும். இந்த கடன் வசதியின் கீழ் அதிகபட்ச கால கடன் தொகை ரூ.35 லட்சம் வழங்கப்படும். மேலும் நாங்கள் குறைந்த வட்டி விகிதங்களை வசூலிப்போம். இந்தக் கடனைப் பெறுவதற்கு பாதுகாப்பு அல்லது உத்தரவாதம் தேவையில்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Loan, SBI, STATE BANK, State Bank of India

    அடுத்த செய்தி