கட்டணம் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம்... எஸ்பிஐ தரும் சூப்பர் ஆஃபர்!

எஸ்பிஐ சலுகைகள்

புதிய சலுகை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 30ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

 • Share this:
  எஸ்பிஐ லைஃப் வாடிக்கையாளரா நீங்கள்? இதோ இந்த முக்கியமான தகவல் உங்களுக்குதான் நோட் பண்ணிக்கோங்க.

  நீங்கள் எஸ்பிஐயின் லைஃப் பாலிசியை நீண்ட நாட்களாக புதுப்பிக்காமல் வைத்துள்ளீர்களா? இதோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக பாலிசியை நீங்கள் புதுப்பிக்காமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்போதாவது புதுபிக்க முடிவு எடுங்கள். உங்களுக்கு எஸ்பிஐ வழங்கும் சிறப்பு சலுகைகளும் தள்ளுபடிகளும் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது எஸ்பிஐ லைஃப் பாலிசியை 2 முதல் 3 வருட காலமாக புதுபிக்கவில்லை அல்லது காலாவதியான பாலிசிகளை, புதிய சலுகை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 30ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

  இந்த சிறப்பு சலுகை வரும் வரும் செப்டம்பர் 30 வரை மட்டுமே. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவீடாதீர்கள். உங்களுடைய எஸ்பிஐ லைஃப் பாலிசியை மீண்டும் புதுப்பிக்க https://mypolicy.sbilife.co.in/Campaign/RevivalQuotation.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும். இந்த தளத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் பாலிசியை புதுபித்து கொள்ளலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ லைஃப் தளத்திலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கொரோனா காலத்தில் பல பாலிசிகளை கட்ட பொதுமக்கள் தவறவிட்டுள்ளனர். இதனால் பல ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாலிசியை புதுபிக்க கால அவகாசம் வழங்கி வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ லைஃப் தனது வாடிக்கையாளர்களுக்கு பாலிசியை புதுபித்து கொள்ள இப்படியொரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு வங்கி நிர்வாகம் கேட்டுக்கோண்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: