விவசாயிகளுக்கு மிகக்குறைந்த வட்டியில் 4,00,000 ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை எஸ்பிஐ அறிவித்துள்ளது. விவசாயிக் கடன் திட்டம் பற்றிய முழு விவரங்கள் இங்கே.
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கி, எஸ்பிஐ கிரெடிட் கிசான் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை ஏழு சதவிகித வட்டியில் கடன் பெற முடியும். விவசாயிகள் வாங்கும் கடன் தொகை 3,00,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் கூடுதலாக இரண்டு சதவிகித மானியத்தையும் பெறலாம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை விவசாயத்துக்கு தேவையான கருவிகள், விதைகள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம். ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து கடனைப் பெறலாம்.
எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டு திட்டம் வழியாக ஆன்லைனிலேயே உங்களுக்கு இப்பொழுது விவசாயக் கடன்கள் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிசான் கடன் அட்டை பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் இங்கே.
எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன அது விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுகிறது
விவசாயம் செய்வதற்கு தேவையான உரம், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்குவதற்கு விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் உள்ளது. அவ்வகையான விவசாயிகளுக்கு நிதி உதவியை அளிக்கும் வகையில் எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டை வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே போதிய நிதி வசதி இல்லாத விவசாயிகள் அதிகப்படியான வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்வதை தடுப்பதே ஆகும்.
இதையும் படியுங்கள் : பெட்ரோல், டீசல்: இன்றைய (பிப்ரவரி 4, 2022) விலை நிலவரம்... வாகன ஓட்டிகள் நிம்மதி
இந்தக் கிரெடிட் கார்டுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
விவசாயம் செய்யும் ஒரு தனி நபர், கூட்டு சாகுபடிகள் உரிமையாளர் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
* இந்தக் கடன் அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பதாரரின் பான் கார்டு, ஆதார் கார்டு வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் அல்லது வேறு ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாக வழங்க வேண்டும்.
* முகவரிச் சான்றாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பயன்பாட்டு பில், அல்லது வேறு ஏதேனும் அரசு அங்கீகாரம் அளித்த முகவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்... வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!
* எஸ்பிஐ கிசான் கிரெடிட் கார்டு, எஸ்பிஐ இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது.
* உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வங்கி கணக்கு இருந்தால் நீங்கள் எஸ்பிஐ யோனோ ஆப்பில், yono விவசாய வலைதளத்தின் வழியாக கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்
அடுத்தது என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்
* கிசான் கிரெடிட் கார்டு ரிவ்யூ என்ற பகுதிக்குச் சென்று ஆப்ளிகேஷன் ஆப்ஷன் என்ற விண்ணப்பத் தேர்வை செலக்ட் செய்யுங்கள்
* கடன் அட்டைக்கான விண்ணப்பத்தில் அதில் கோரப்பப்டும் அனைத்து விவரங்களையும் நிரப்பி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். வங்கி உங்களது விண்ணப்பத்தை மதிப்பாய்வு கிரெடிட் கார்டை அப்ரூவ் செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Credit Card, Interest, PM Kisan, SBI