• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டம்: புதிய முயற்சியில் எஸ்பிஐ!

ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டம்: புதிய முயற்சியில் எஸ்பிஐ!

தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    எஸ்பிஐ வங்கி ஜூலை 1-ம் தேதி முதல் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

    ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகள் வாங்கும் கடனை திருப்பில் செலுத்துவதற்கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது. இந்த ரெப்போ வட்டி விகிதம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆர்பிஐ கவர்னர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன் திட்டம் மீதான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.55 சதவீதமாக உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ரெப்போ வட்டியுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் போது இது 8.35 சதவீதமாகக் குறையும்.

    அதேபோன்று ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது வீட்டுக் கடன் திட்டம் மீதான தவணையும் உயரும்.

    ஏப்ரல் 1-ம் தேதி எஸ்பிஐ வங்கி சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளவர்களின் வங்கிக் கணக்குகள் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: