வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்பிஐ!

சென்ற வாரம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது.

news18
Updated: February 11, 2019, 11:52 AM IST
வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்பிஐ!
எஸ்பிஐ வீட்டுக் கடன்
news18
Updated: February 11, 2019, 11:52 AM IST
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைச் சென்ற வாரம் 0.25 சதவீதம் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளது.

சென்ற வாரம் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவித்துள்ளது. எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் எல்லாம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வங்கி டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் எல்லாம் குறைக்கப்படாத நிலையில் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இது எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வங்கிகள் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.

எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து பிற வங்கிகளும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை விரைவில் குறைத்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

மேலும் பார்க்க: வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...