வீட்டுக்கடன் வாங்கியோருக்கான தவணை குறைகிறது - டிசம்பர் 10 முதல் அமல்!

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 30 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

வீட்டுக்கடன் வாங்கியோருக்கான தவணை குறைகிறது - டிசம்பர் 10 முதல் அமல்!
எஸ்பிஐ வீட்டுக் கடன்
  • News18
  • Last Updated: December 9, 2019, 6:50 PM IST
  • Share this:
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக்கடன் மாத தவனையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கிக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தக் குறைப்பு நடவடிக்கை எட்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றத்தையும் அறிவிக்காத காரணத்தினாலே எஸ்பிஐ வட்டி விகிதம் குறைந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இனி மாதாமாதம் வட்டி கட்டும் வாடிக்கையாளர்களின் பளு பெருமளவு குறையும்.


வீட்டுக்கடன் மட்டுமல்லாது பல்வேறு கடன் வகைகளுக்கும் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.

வீடு மற்றும் வாகனக் கடன் பிரிவில் மட்டும் எஸ்பிஐ வங்கிக்கும் 25 சதவிகித பங்கு உள்ளது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அடிப்படையில் எஸ்பிஐ வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 30 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

மேலும் பார்க்க: இனி 24x7 நேரமும் NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்- ஆர்பிஐ அறிவிப்பு
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்