ஹோம் /நியூஸ் /வணிகம் /

வீட்டு கடன்களுக்கு சலுகைகளை அறிவித்த SBI வங்கி

வீட்டு கடன்களுக்கு சலுகைகளை அறிவித்த SBI வங்கி

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவின் மிக பெரிய வீட்டுக் கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் பிரிவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. வீட்டுக் கடன்களின் நிர்வாகத்தின் (assets under management) கீழ் தனது ஹோம் லோன் புக், ரூ.6 டிரில்லியன் அதாவது ரூ.6 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக SBI வங்கி கூறி உள்ளது ?

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவின் மிக பெரிய வீட்டுக் கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் பிரிவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. வீட்டுக் கடன்களின் நிர்வாகத்தின் (assets under management) கீழ் தனது ஹோம் லோன் புக், ரூ.6 டிரில்லியன் அதாவது ரூ.6 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக SBI வங்கி கூறி இருக்கிறது.

  இதன் மூலம் நாட்டிலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல்வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது. கடந்த ஜனவரி 2021-ல் SBI வங்கியின் ஹோம் லோன் புக் ரூ.5 லட்சம் கோடியை தாண்டிய நிலையில், குடியிருப்பு வீடுகள் பிரிவில் (residential home category ரூ.6 லட்சம் கோடி மைல்கல்லை எட்டிய முதல் கடன் வழங்குபவர் என்ற சாதனையை எட்டி இருப்பதாக அறிக்கை ஒன்றில் வங்கி பெருமிதம் தெரிவித்து உள்ளது.

  இந்த சாதனைக்கு மத்தியில் தற்போதைய பண்டிகை காலத்தில் அனைத்து வருங்கால வீடு வாங்குபவர்களுக்கும் மலிவு விலையில் வீட்டு கடன்களை வழங்குவதை SBI நோக்கமாக கொண்டுள்ளது. வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு SBI வங்கி ஒருசில சலுகையை அறிவித்து உள்ளது.

  இந்த சலுகையின்படி வட்டி விகிதத்தில் 8.40 சதவீதத்தில் இருந்து 25 bps வரை தள்ளுபடி மற்றும் ஜனவரி 31, 2023 வரை செயலாக்க கட்டணத்தையும் (Processing fee) தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. தவிர டாப்அப் லோன்களில் 0.15%, சொத்து மீதான கடனில் (loan against property) 0.30% தள்ளுபடி, பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்களுக்கும் குறைந்த வட்டியும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த வெற்றிகரமான சாதனை மைல்கல் குறித்து கருத்து தெரிவித்து உள்ள SBI வங்கியின் தலைவர் தினேஷ் காரா, இந்த சாதனைக்கு மத்தியில் எங்கள் வங்கிக்கு சுமார் 28 லட்சம் வீட்டு கடன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என குறிப்பிட்டு உள்ளார். மேலும், ’ஹோம் ஃபைனான்ஸில் முன்னணியில் இருக்கும் SBI, ஒவ்வொரு இந்தியரின் சொந்த வீடு கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறது.

  கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான செயல்முறை மற்றும் டிஜிட்டல் முயற்சிகள் ரூ.6 டிரில்லியன் மதிப்பை நோக்கிய எங்கள் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தன.

  சொந்த வீடு வேண்டும் என்ற இந்தியர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் SBI தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு என்ற நமது அரசின் கனவை நனவாக்க பாடுபடுகிறோம்' என்றார்.

  Read More: மன நலப் பிரச்சனைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவரேஜ் உண்டா? விடை இங்கே!

  SBI-யின் ரீடெய்ல் பேங்கிங் & ஆபரேஷன்ஸ் மேனேஜிங் டைரக்டர் அலோக் குமார் சவுத்ரி பேசுகையில், புதிய கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 8.40 சதவீதத்தில் இருந்து தொடங்கும் மற்றும் டாப்-அப் கடன்கள் 8.80 சதவீதத்தில் இருந்து தொடங்கும் என குறிப்பிட்டார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Home Loan, SBI, SBI Loan