இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (SBI) இன்று (10/12/2018) முதல் கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தினை 0.05 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவினால் கடன் மீதான EMI செலவுகள் அதிகரித்து மாத பட்ஜெட்டில் சிக்கல் ஏற்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது.
வீடு, வாகனம் என அனைத்துக் கடன் திட்டங்கள் மீதான இந்த வட்டி விகித உயர்வும் 2018 டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதால் ஜனவரி மாதம் முதல் கடன் வாங்கியவர்களின் பட்ஜெட் அதிகரிக்கும்.
கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்துடன் சேர்த்து பிரைம் கடன் வட்டி விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டு 13.80 சதவீதமாகவும், அடிப்படை வட்டி விகிதத்தை 9.05 சதவீதமாகவும் அறிவித்துள்ளனர்.
எஸ்பிஐ வங்கியினைத் தொடர்ந்து பிற வங்கி நிறுவனங்களும் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை விரைவில் உயர்த்த அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் பார்க்க: கனடாவில் வேலை... ரூ.54 லட்சம் மோசடி.. நடந்தது என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Interest rate hike, Loan, SBI