முகப்பு /செய்தி /வணிகம் / Fixed Deposit கணக்குகளுக்கு வட்டி அதிகரிப்பு – SBI அறிவிப்பு

Fixed Deposit கணக்குகளுக்கு வட்டி அதிகரிப்பு – SBI அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

SBI Hikes Interest : 2 கோடிக்கும் குறைவான வைப்பு நிதி கணக்குகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்களின் விவரங்கள் இங்கே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சமீப காலமாக பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் தங்களுடைய சேமிப்பு மற்றும் வைப்பு நிதி கணக்குகளுக்கு வழங்கும் வட்டியை அதிகரித்துள்ளது. நிலையான வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வட்டியை அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டமாகும். நீங்கள் குறுகிய காலம் முதல் நீண்ட கால வைப்பு நிதிக் கணக்கில் பணம் சேமிக்கலாம். ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அரசு வங்கி, தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்து வகையான நிறுவனங்களுமே வழங்குகின்றன.

சில நாட்களுக்கு முன்புதான் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வைப்பு நிதி கணக்குகளின் முதிர்வு காலத்திற்கு ஏற்றவாறு வட்டி அதிகரிப்பை அறிவித்திருந்தது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியும் குறிப்பிட்ட முதிர்வு காலம் இருக்கும் வைப்பு நிதி கணக்குகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கான அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

இதையும் படியுங்கள் : உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டதா, வீட்டிலிருந்தபடியே அதை மீண்டும் பெறுவது எப்படி?

இரண்டு கோடிக்கும் குறைவான வைப்பு நிதி கணக்குகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்களின் விவரங்கள் இங்கே.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை வரையிலான FD கணக்குகள் முதிர்வடையும் போது, 2.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது மற்றும் மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வைப்பு நிதி கணக்கு, மூன்று கால அளவுகளில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

7 முதல் 14 நாட்கள் வரை
15 முதல் 29 நாட்கள் வரை
30 முதல் 45 நாட்கள் வரை

46 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான கால அளவு உள்ள FD கணக்குகள் முதிர்வடையும் போது, 3.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4. 4 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வைப்பு நிதி கணக்கு, மூன்று கால அளவுகளில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

41 முதல் 60 நாட்கள் வரை
61 முதல் 90 நாட்கள் வரை
91 முதல் 120 நாட்கள் வரை

ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 4.40 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வைப்பு நிதி கணக்கு, மூன்று கால அளவுகளில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • 6 மாதங்களுக்கு மேல் முதல் 9 மாதங்கள் வரை
  • 9 மாதங்களுக்கு மேல் முதல் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலம் வரை
  • 1 ஆண்டு 1 நாளுக்கு மேல் முதல் 2 ஆண்டுகள் வரை

இதையும் படியுங்கள் : தபால் அலுவலகத்தில் டைம் டெபாசிட் கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?

இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.20 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.70 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

மூன்று முதல் ஐந்து வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.45 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஐந்து முதல் பத்து வருடம் வரை முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.50 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 6.30 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி அதிகரிப்பு, பிப்ரவரி 15 2022 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: SBI, SBI Bank, SBI Loan