முகப்பு /செய்தி /வணிகம் / FD மற்றும் RD-க்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள எஸ்.பி.ஐ வங்கி..!

FD மற்றும் RD-க்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள எஸ்.பி.ஐ வங்கி..!

காட்சி படம்

காட்சி படம்

SBI : நாட்டின் மிக பெரிய பேங்க்கான SBI அதன் FD-களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்று அதன் வெப்சைட்டில் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, FD எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய அக்கவுண்ட்ஸ்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை திருத்தி உள்ளது. தொடர் வைப்பு தொகை என குறிப்பிடப்படும் ரெக்கரிங் டெபாசிட் என்பது ஒரு சேமிப்புத் திட்டமாகும், இதில் முதலீட்டாளர் தவணை முறையில்களில் பணம் செலுத்த வேண்டும். அதே சமயம் FD திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகை கிடைக்கும்.

இதனிடையே FD மற்றும் RD-க்கான டெபாசிட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு SBI-ன் இந்த வட்டி விகித உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் உயர்த்தப்பட்டுள்ளன..

SBI FD வட்டி விகித உயர்வு:

நாட்டின் மிக பெரிய பேங்க்கான SBI அதன் FD-களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்று அதன் வெப்சைட்டில் அறிவித்துள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு இந்த புதிய வட்டி விகிதங்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. வட்டி விகிதங்கள் 10 பேஸிஸ் பாயிண்ட்ஸ் அல்லது 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  பிக்ஸடு டெபாசிட்டை விட சிறந்த வருமானம் தரும் 5 போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள்!

இந்த புதிய விகிதங்கள் கடந்த ஜனவரி 22, சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கியின் வெப்சைட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI-ன் FD வட்டி விகித உயர்வு நடவடிக்கை HDF, Axis, ICICI மற்றும் Canara வங்கியுடன் நெருங்கி வருகிறது. மேலும் ஃபிக்ஸட் டெபாசிட்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் போக்கிற்கு வங்கிகள் மெதுவாக சென்று வருகின்றன கொண்டிருப்பதையும் இது குறிக்கிறது.

SBI-யில் FD-க்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரைபொது மக்களுக்கு 2.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம்
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரைபொது மக்களுக்கு 3.90 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.40 சதவீதம்
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரைபொது மக்களுக்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரைபொது மக்களுக்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாகபொது மக்களுக்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவாகபொது மக்களுக்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாகபொது மக்களுக்கு 5.30 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.80 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரைபொது மக்களுக்கு 5.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதம்

SBI-யில் ரெக்கரிங் டெபாசிட்கான வட்டி உயர்வு:

SBI-யின் RD வட்டி விகிதங்கள் பொது மக்களுக்கு 5.1 சதவீதம் -5.4 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50 பேஸிக் பாயிண்ட்ஸ் கூடுதல் வட்டி விகித உயர்வு இடையே மாறுபடும். இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜனவரி 15, 2022 முதல் SBI-ல் ரெக்கரிங் டெபாசிட்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் கீழே..

இதையும் படியுங்கள் :  அஞ்சல் நிலையத்தில் உள்ள அக்கவுண்டை முடிக்கிறீர்களா? - இந்த விதியை பின்பற்றுங்கள்!

* 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவாக முதிர்வடையும் திட்டத்திற்கு 5.1 சதவீதம்

* 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முதிர்வடையும் திட்டத்திற்கு 5.1 சதவீதம்

* 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் குறைவாக முதிர்வடையும் திட்டத்திற்கு 5.3 சதவீதம்

* 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையில் முதிர்வடையும் திட்டத்திற்கு 5.4 சதவீதம்

First published:

Tags: SBI, SBI Bank