ஹோம் /நியூஸ் /வணிகம் /

SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது!

SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

SBI வங்கி கிரெடிட் கார்டு நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு துணிக்கடை முதல் நகைக்கடை வரை எங்கு சென்று பொருள்களை வாங்கினாலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் பழக்கம் என்பது மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் வட்டி இல்லாமல் சுமார் 50 நாள்கள் வரை பணத்தைப் பயன்படுத்த கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் குறைந்த சேவைக்கட்டணம் நடைமுறைக்கு இருந்த நிலையில் தற்போது பல்வேறு வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு பயனர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐயும் கிரெடிட் கார்டு நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

  இதன்படி எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கானக் கட்டணம் உயர்த்தப்பட்டதோடு நேற்று முதல் அதாவது நவம்பர் 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது. எப்படி இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? எவ்வளவு உயர்ந்துள்ளது என இங்கே தெரிந்துக் கொள்வோம்.

  தற்போது வரை SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்களுக்கு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை பிராசஸிங் (சேவைக்கட்டணம்) கட்டணமாக ரூபாய் 99 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக கடைகளில் பொருள்களை வாங்கிவிட்டு அதனை இஎம்ஐக்கு நடைமுறைக்கு மாற்றுவோம். அதற்கு இதுவரை ரூபாய் 99 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய நடைமுறையின் படி, இதுவரை இஎம்ஐ பிராசஸிங் கட்டணம் ரூபாய் 199 மற்றும் வரி வசூலிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

  ரூ.5,000-ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

  இந்த முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் இனி பயனர்களுக்கானச் செலவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதோடு கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் சேவைக்கட்டணம் அதிகரித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

  குறிப்பாக Cred, Paytm, Red Giraffe, Mygate மற்றும் Magicbricks போன்ற மூன்றாம் தரப்பு பயனர்களும் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இதற்கான கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறது. இதேப் போன்று தான் கடந்த செப்டம்பர் மாதம் ஐசிஐசிஐ ( ICICI Bank) கிரெடிட் கார்டு வாயிலாக வாடகை செலுத்துவதற்கு 1 சதவீதம் கட்டணத்தையும், கடந்த அக்டோபர் மாதம் முதல் எச்டிஎப்சி வங்கியிலும் கிரெடிட் பயனர்களுக்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது இஎம்ஐ ( EMI) பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சேவைக்கட்டண உயர்வு என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய தொகையாக இருந்தாலும் நம்முடைய மாதாந்திரக் கணக்கில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு தேவையற்ற செலவாகப் பார்க்கப்படுகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Credit Card, SBI