SBI, HDFC வங்கிகளில் மீண்டும் வட்டி உயர்வு - சலுகையை ரத்து செய்த வங்கிகள்!

ஹெச்டிஎஃப்சி

கடனாக வழங்கப்படும் தொகைக்கு உத்தரவாதம் உள்ள பிரிவான வீட்டுக் கடனுக்கு கடந்த நிதியாண்டின் இறுதியில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் அதிரடியாக வட்டியை குறைத்து அறிவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மார்ச் 1 முதல் 31 வரை சிறப்பு வட்டிச் சலுகையை வழங்கி வந்த எஸ்,பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகள் அதனை தற்போது ரத்து செய்துள்ளன.

புதிய நிதியாண்டு தொடங்குவதையொட்டி வங்கிகள் வட்டி விகிதங்களில் அதிரடியாக சலுகைகளை அறிவித்தனர். கடனாக வழங்கப்படும் தொகைக்கு உத்தரவாதம் உள்ள பிரிவான வீட்டுக் கடனுக்கு கடந்த நிதியாண்டின் இறுதியில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் அதிரடியாக வட்டியை குறைத்து அறிவித்தனர். அதாவது மார்ச் 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட வட்டிச் சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எஸ்பிஐ வங்கியானது 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு 6.7 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியை அறிவித்தது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமான எஸ்பிஐ வீட்டு கடனுக்கான processing கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தது. இதேபோல், தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சியும் வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைத்தது. இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 0.5 சதவீதம் குறைப்பதாகவும், வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. அதேபோல, மார்ச் 31ஆம் தேதி வரையில் செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. ஹெச்டிஎஃப்சி வங்கியைத் தொடர்ந்து கோடாக் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.65 சதவீதமாக நிர்ணயித்தது.

Also read... ஏப்ரல் மாதத்தில் இந்த தேதிகளில் மட்டும் வங்கிகள் இயங்காது: முழு விவரம்!

தற்போது புதிய நிதியாண்டு தொடங்கியிருப்பதால், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டி விகிதங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும்,ஹெச்.டி.எப்.சி வங்கி இணையப் பக்கத்தில் இது குறித்து அப்டேட் இன்னும் செய்யப்படவில்லை. மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் வட்டி விகிதம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. மேலும், பஞ்சாப் வங்கி, பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளும் மார்ச் 31 வரை வழங்கி வந்த வட்டி சலுகையும் முடிவுக்கு வந்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாராக்கடன் பிரச்சனைகள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பதால், பாதுகாப்பான கடன் பிரிவாக கருதப்படும் வீட்டுக் கடன் பிரிவை ஊக்குவிக்க மத்திய அரசும், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் முடிவு செய்தன. அந்த வகையில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் போட்டிப் போட்டுக்கொண்டு குறைத்தன. பொதுவாகப் பொதுத்துறை வங்கிகள் குறைவான வட்டியில் வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றைக் கொடுக்கும். ஆனால் கடந்த நிதியாண்டு இறுதியில் பொதுத்துறை வங்கியை விடவும் தனியார் வங்கி குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆர்வம் காட்டின. கொரோனா வைரஸ் பாதிப்பால் சொந்த வீடு கட்டும் முடிவை கைவிட்டவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: