மூத்த குடிமக்களுக்கான SBI, HDFC, ICICI, Bank of Barodaவின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டம் மார்ச் 31 உடன் முடிவடைகிறதாம்...!

மாதிரி படம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் போன்ற வங்கிகள் கூடுதல் வட்டி விகிதத்தைத் தருகின்றன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு நிலையான வைப்பு (fixed deposit (FD)) திட்டங்களை வழங்குகின்றன, இது கால வைப்புத்தொகைக்கு (term deposits) அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.

  மற்றவர்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் அதிக வட்டி லாபம் தருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் போன்ற வங்கிகள் கூடுதல் வட்டி விகிதத்தைத் தருகின்றன. அதுவும் குறிப்பாக, கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் 2020 மே மாதத்தில் சிறப்புச் சலுகைகளை அறிவித்தன. இச்சலுகை அடுத்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்பதால் அதற்குள் இணைந்து பயன்பெறலாம்

  மூத்த குடிமக்களுக்கான SBI சிறப்பு FD திட்டம்:

  5 வருடங்கள் மற்றும் அதற்கு கூடுதலான கடன் கால அளவு உள்ள கால வைப்பு தொகைகளுக்கு சாதாரண மக்களுக்கு பொருந்தும் விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டியை எஸ்பிஐ வழங்கும். தற்போது, எஸ்பிஐ ஐந்தாண்டு நிலையான வைப்புத்தொகைக்கு 5.4 சதவீத வட்டியை பொது மக்களுக்கு வழங்குகிறது. சிறப்பு FD திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 6.20 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

  HDFC வங்கி:

  HDFC வங்கி இந்த வைப்புகளில் 75 பிபிஎஸ் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு பொருந்தும் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.

  ICICI வங்கி:

  ICICI வங்கி நிலையான வைப்புகளில் 80 பிபிஎஸ் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ICICI வங்கி கோல்டன் இயர்ஸ் எஃப்.டி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.30 சதவீதம் வட்டி விகிதத்தை அளிக்கிறது.

  Also read... 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - ஐசிஐசிஐ வங்கியின் புதிய அறிவிப்பு!

  பேங்க் ஆஃப் பரோடா:

  பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான சேமிப்பில் 6.25 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. இந்த சேமிப்புகளுக்கு 100 அடிப்படைப் புள்ளிகள் அதிகமான அளவு வட்டி லாபம் வழங்கப்படுகிறது.

  கொரோனா பலரையும் நிதி சிக்கலில் தள்ளி இருந்த நிலையில் அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது மூத்த குடிமக்களுக்கான பல பயன்தரும் சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் நிலைமை ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்தவகையில் உங்கள் வீட்டில் மூத்த குடிமக்கள் யாரவது இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இந்த வங்கிகளின் சலுகைகளை பரிந்துரை செய்யுங்கள். முதியோர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் நிச்சயம் பயன் தரும்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: