• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • sbi : பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இப்படியொரு சலுகையா? நோட் பண்ணிக்கோங்க!

sbi : பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இப்படியொரு சலுகையா? நோட் பண்ணிக்கோங்க!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

வழக்கமான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டியை விட இதில் 0.30 சதவீதம் கூடுதலான வட்டி

  • Share this:
    எந்தவித பயமும் இன்றி பலரும் நம்பி முதலீடு செய்யும் திட்டமாக இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எந்த வங்கியில் பணத்தை சேமிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. முதலீடு திட்டங்களில் சேமிக்கிறோம் என்று தவறான திட்டங்களை தேர்வு செய்தால் நமக்கு தான் நஷ்டம். அதுமட்டுமில்லை லாபம் கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.

    அதனால் தான் எப்போதுமே நன்கு ஆராய்ந்து பல முறை விசாரித்த பின்னரே முதலீடு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய சூழலில் தொழிலதிபர்கள் உட்பட பணக்காரர்கள் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்கின்றனர். அதற்கு காரணம் இருக்கு. இந்த திட்டங்களில் நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் இருக்கும் wecare deposit scheme. குறிப்பாக இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

    பர்சனல் லோன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

    இத்திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் 5 ஆண்டுகள் மட்டுமே. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பிள்ளைகள் கட்டாயம் பெற்றோர்களுக்காக இந்த திட்டத்தை தொடங்கிவிடுங்கள். இதில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை இதில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தின் கிடைக்கும் மிகப் பெரிய சலுகை என்னவென்றால் வழக்கமான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டியை விட இதில் 0.30 சதவீதம் கூடுதலான வட்டி வழங்கப்படுகிறது. எனவே முதலீடு தொகையைப் பொறுத்து அதிக லாபமும் இதில் கிடைக்கும். தற்சமயம் பலரும் இந்த திட்டத்தில் இணைந்து வருகின்றனர். இத்திட்டம் 2022 மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: