5 லிட்டர் இலவச பெட்ரோல் சலுகையை நீட்டித்த எஸ்பிஐ! எப்படிப் பெறுவது?

எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் 100 ரூபாய்க்கு கூடுதலாகப் பெட்ரோல் போடும் போது 2018 நவம்பர் 23 வரை 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 12:15 PM IST
5 லிட்டர் இலவச பெட்ரோல் சலுகையை நீட்டித்த எஸ்பிஐ! எப்படிப் பெறுவது?
இந்தியன் ஆயில் மற்றும் எஸ்.பி.ஐ
Web Desk | news18
Updated: December 7, 2018, 12:15 PM IST
எஸ்.பி.ஐ - இந்தியன் ஆயில் இணைந்து வழங்கும் இலவச பெட்ரோல் திட்டத்திற்கான காலெக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியானது இந்தியன் ஆயில் எண்ணெய் நிலையங்களில் பெட்ரோல் போடும் போது 5 லிட்டர் வரை இலவசமாக பெட்ரோல் பெறக்கூடிய சலுகை ஒன்றை வழங்கி வருகிறது.

எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் 100 ரூபாய்க்கும் கூடுதலாகப் பெட்ரோல் போடும் போது 2018 நவம்பர் 23-ம் தேதி வரை 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

எஸ்பிஐ, இலவசம், பெட்ரோல், சலுகை, காலக்கெடு, நீட்டிப்பு, SBI, Extends, Deadline, Free, 5 Litre Petrol scheme, sbi petrol offer
சலுகை விளம்பரம்

Loading...


தற்போது இந்த சலுகையை 2018 டிசம்பர் 15-ம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது.

எப்படி 5 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறுவது?

1. இந்தியன் ஆயில் எண்ணெய் நிலையங்களில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு எஸ்பிஐ கார்டுகள் அல்லது பீம் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும்.

2. பணத்தை செலுத்திய பிறகு வங்கி அளிக்கும் 12 இலக்க யூபிஐ குறிப்பு எண் (Reference Number) அல்லது ஆறு இலக்க அங்கீகாரம் குறியீடு (Authorization code) விவரங்களை சேமித்து வைத்துக்கொள்க.

3. பின்னர் மொபைல் போனில் இருந்து “BHIM SBI Pay: 12-digit UPI reference number DDMM (தேதி/மாதம்)” உள்ளிட்ட விவரங்களை அளித்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

4. ஒவ்வொரு நாளும் 10,000 எஸ்எம்ஸ் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 50 ரூபாய், 100 ரூபாய், 150 ரூபாய் மற்றும் 200 ரூபாய் எனக் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.

5. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

6. எத்தனை முறை பெட்ரோல் போட்டுப் பணம் செலுத்தினாலும் இந்தச் சலுகையை வாடிக்கையாளர்களால் பெற முடியும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

7. இதில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு இரண்டு வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் செலவு செய்யக்கூடிய XTRAREWARDS வெகுமதி புள்ளிகளும் வழங்கப்படும்.

மேலும் பார்க்க:  250 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்