ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்கிறதா? SBI வழங்கும் இந்த பிசினஸ் ஸ்கீம் மூலம் மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்!

உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்கிறதா? SBI வழங்கும் இந்த பிசினஸ் ஸ்கீம் மூலம் மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்!

SBI வழங்கும் பிசினஸ் ஸ்கீம்

SBI வழங்கும் பிசினஸ் ஸ்கீம்

நீங்கள் SBI-யின் ATM சென்டரை அமைக்க விரும்பினால் மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகிறது எஸ்பிஐ. சேவிங் அக்கவுண்ட், கடன், இன்ஷுரன்ஸ், ட்ரேடிங் அக்கவுண்ட் போன்ற பல வகையான வங்கி சேவைகளை வழங்குகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI).

மேலும் இந்த வங்கி வீட்டு கடன், தொழில் கடன், கார் கடன் போன்ற பல வகை கடன்களையும் வழங்குகிறது. நீங்கள் இந்த வங்கி மூலம் மாதா மாதம் நன்றாக சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் பெற முடியும். நீங்கள் ஒருமுறை சுமார் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் சில மாதங்களில் அதை திரும்ப பெறுவதோடு, குறிப்பிட்ட முதலீடு மூலம் நீங்கள் ஒரு சராசரி ஐடி ஊழியரின் சம்பளத்தை பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா.!!

வங்கித் துறையில் ஒயிட் லேபிள் ஏடிஎம் அமைப்பது ஒரு சிறந்த வணிக வாய்ப்பாக இருந்து வருகிறது. 10 லட்சம் இந்திய மக்களுக்கும் வெறும் 100 ஏடிஎம்-கள் என்கிற விகிதத்தில் நாட்டில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், உலகளாவிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது இது சிறிய எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்கை இந்த வங்கி கொண்டுள்ளது. ஏடிஎம்-களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ, ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு அற்புதமான உரிமை வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் SBI ஏடிஎம் சென்டர் அமைப்பதற்கான உரிமம் பெற்று முதலீடு செய்வதன் மூலம் தரமான சம்பாத்தியத்தை பெறலாம்.

Read More : வீடு வாங்கும் எண்ணம் இருக்கா? ஆனால் EMI கண்டு பயமா? உங்களுக்கான டிப்ஸ்!

SBI ஃபிரான்சைஸ் திட்டத்தில் இணைய என்ன செய்வது?

SBI-ஐ பொறுத்தவரை ATM சென்டர் அமைப்பதற்கான ஒப்பந்தம் டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவற்றுடன் செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் SBI-யின் ATM சென்டரை அமைக்க விரும்பினால் மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நிபந்தனைகள் என்ன?

 • SBI-யின் ஏடிஎம் சென்டர் அமைக்க குறைந்தப்பட்சம் உங்களிடம் சொந்தமாக 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
 • பிற வங்கிகளின் ATM உங்கள் இடத்திற்கு அருகில் இருந்தால் அதற்கும் உங்கள் இடத்திற்கும் இடையில் குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் சாலைகளில் செல்லம் பொதுமக்களின் பார்வையில் எளிதில் தெரியும்படி உங்களது இடம் இருக்க வேண்டும்.
 • 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 1 கிலோவாட் எலெக்ட்ரிசிட்டி கனெக்ஷன் கட்டாயம்.
 • நீங்கள் ATM அமைக்க விரும்பும் உங்கள் இடம் செங்கல் சுவர்கள் மற்றும் கான்கிரீட் ரூஃபுடன் கூடிய நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும்.
 • ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.
 • முன்புறம் பார்க்கிங் செய்ய இடம் இருக்க வேண்டும்
 • ஒருவேளை நீங்கள் ஒரு கம்யூனிட்டியில் வசிக்கிறீர்கள் என்றால் V-SAT-ஐ இன்ஸ்டால் செய்ய நீங்கள் அசோசியேஷன் போன்ற சங்கத்திடமிருந்து NOC-ஐ பெற வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

 • ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி போன்ற அடையாளச் சான்றுகள்
 • ரேஷன் கார்டு, எலெக்ட்ரிசிட்டி பில் போன்ற முகவரி சான்றுகள்
 • பேங்க் அக்கவுண்ட் & பாஸ்புக்
 • ஃபோட்டோ, இ-மெயில் ஐடி, ஃபோன் நம்பர்
 • நிறுவனத்திற்குத் தேவையான பிற ஆவணங்கள்/படிவங்கள் மற்றும் நிதி ஆவணங்கள்
 • ஜிஎஸ்டி நம்பர்

SBI ஏடிஎம் உரிமைக்கு நீங்கள் விண்ணப்பித்து அனுமதி பெறும் போது ரூ.2 லட்சம் செக்யூரிட்டி டெப்பாசிட் மற்றும் ரூ.3 லட்சத்தை வொர்கிங் கேப்பிட்டலாகவும் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் முதலீடு ரூ.5 லட்சம் வரை இருக்கும். நீங்கள் உங்கள் இடத்தில் அமைக்கும் ATM-ல் தினமும் சராசரியாக 300 - 500 பரிவர்த்தனைகள் நடந்தால் மாத வருமானம் ரூ.45,000 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம். ஒவ்வொரு கேஷ் ட்ரான்ஸ்சாக்ஷனுக்கும் ரூ.8 மற்றும் பேலன்ஸ் செக் செய்வது ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் உள்ளிட்ட நான்-கேஷ் ட்ரான்ஸ்சாக்ஷனுக்கு ரூ.2 பெறுவீர்கள்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, SBI ATM