வெறும் 75 நாட்களுக்கு அதிக வட்டி தரும் சூப்பரான டெபாசிட் திட்டம்! இப்பவே யூஸ் பண்ணிக்கோங்க

75 நாட்கள் டெபாசிட் திட்டம்

வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

 • Share this:
  75 நாள் வரையிலான டெபாசிட் திட்டங்கள் அதுவும் நீங்கள் எதிர்பாராத வட்டி சலுகையுடன் உள்ளது. மறக்காமல் யூஸ் பண்ணிக்கோங்க.

  எஸ்பிஐ வங்கி.. நாட்டின் மிகப்பெரிய சிறந்த பொதுத்துறை வங்கியாக செயல்படும் எஸ்பிஐயில் ஏகப்பட்ட டெபாசிட் திட்டங்கள் உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு வரை, மூத்த குடிமக்களுக்கு, குழந்தைகளுக்கு, கணவன் - மனைவி சேமிப்பு திட்டம் என ஏகப்பட்டது உள்ளது. இதில் ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப, முதலீடுகளுக்கு ஏற்ப வட்டி மட்டும் மாறுபடுகின்றன. நமக்கு ஏற்றவாறு ஏற்ற தொகையில் ஒரு நல்ல முதலீடு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து பயன் அடையலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வெறும் 75 நாட்களுக்கான சேமிப்பு திட்டத்தில் நல்ல லாபம் பெறுவது.

  எஸ்பிஐ வங்கியின் பிளாட்டினம் டெபாசிட்ஸ் திட்டத்தை பற்றி கேள்வி பட்டதுண்டா? கவனத்தில் கொள்ளுங்கள் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மட்டும் தான் வாடிக்கையாளர்களுக்காக செயல்பாட்டில் இருக்கும். பிறகு குளோஸ் செய்யப்பட்டு விடும். அதற்கு காரணமும் இருக்கு. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தான் இதுக்குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் 75 நாள், 75 வாரம், 75 மாதம் வரையிலான டேர்ம் டெபாசிட் செய்யலாம். அதாவது உங்கள் டெபாசிட் காலம் 75 நாள், 525 நாள், 2,250 நாள் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு முன்பு 75 நாள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.90 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால் இப்போது சுதந்திர தின ஸ்பெஷலாக 75 நாட்கள் டெபாசிட் திட்டத்திற்கு 3.95 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல, 525 நாள் வரம்பு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2,250 நாள் வரம்பு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் தான் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  also read..சேமிப்பு திட்டத்தில் லட்சங்களில் வருமானம் பெற இதுதான் ஒரே வழி!

  வெறும் 75 நாட்கள் ஒரு நல்ல முதலீடு திட்டத்தை நீங்கள் தொடங்க வேண்டும் என நினைத்தால் எஸ்பிஐயின் பிளாட்டினம் டெபாசிட்ஸ் திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

  Published by:Sreeja Sreeja
  First published: