நல்ல வட்டி.. கை நிறைய லாபம்! நீங்க எப்ப இந்த திட்டத்தில் சேர போறீங்க?

எஸ்பிஐ திட்டம்

5 ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட்டுக்கு 5.30% வட்டியும் வழங்கப்படுகிறது.

 • Share this:
  எஸ்பிஐ வாடிக்கையாளர்களா நீங்கள்? மாதம் முழுவதும் வருமானம் கிடைக்ககூடிய ஒரு சூப்பரான திட்டம் உள்ளது. அதுக் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

  சேமிப்பு என்பது கண்டிப்பாக பலருக்கும் கைக்கொடுக்கும் முதலீடாக உள்ளது. ஆனால் பலரும் அதை செய்ய மறந்துவிடுகின்றனர். அதற்கு காரணம், சரியான வழிக்காட்டல்கள் இல்லாமல் போவது, சேமிப்பு திட்டம் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலும் இருப்பது. சேமிக்க வேண்டும், நல்ல முதலீட்டில் பணத்தை போட என்ற எண்ணம் உள்ளது ஆனால் அதுக்குறித்த விரிவான விவரங்கள் தெரியவில்லை என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பியில் நல்ல முதலீட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. Annuity Deposit திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதில் வாடிக்கையாளர்கள் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாதம் மாதம் வட்டியுடன் சேர்த்து தவணைப் பெற்றுகொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடும். அத்துடன் மாத தவணை உங்கள் கைக்கு கிடைத்துவிடும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையுடன் வட்டி சேர்த்து வங்கி நிர்வாகம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கும். இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வலைத்தளத்தில் பார்க்கலாம் அல்லது வங்கி நிர்வாகத்தை தொடர்பு கொண்டும் கேட்கலாம். குறைந்தது 25,000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை. 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் ஆகிய கால வரம்புகளுக்கு முதலீடு செய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  18 வயதுக்கு கீழானவர்களும் முதலீடு செய்ய அனுமதியுண்டு. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் உதவியுடன் இந்த திட்டத்தில் சேர முடியும். 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 5.40% வட்டியும், 5 ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட்டுக்கு 5.30% வட்டியும் வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 0.05% கூடுதல் வட்டி கிடைக்கும். எஸ்பிஐ வழங்கும் இந்த சூப்பரான முதலீடு திட்டத்தில் உடனே சேர்ந்து மாதம் மாதம் வருமானத்தை பெறுங்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: