நீங்கள் எந்தவித பண பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத நிலையிலும், உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் ரூ.147.50 பிடிக்கப்பட்டுள்ளது என்ற மெசேஜ் உங்களுக்கு வந்து சேர்ந்தால் அதுகுறித்து பதற்றமோ, கவலையோ அடையத் தேவையில்லை. டெபிட் அல்லது ஏடிஎம் பயன்பாட்டிற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்தை எஸ்பிஐ பிடித்தம் செய்து வருகிறது என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பல விதமான ஏடிஎம் கார்டுகளுக்கு எஸ்பிஐ வங்கி ரூ.125 என்ற அளவில் கட்டணம் விதிக்கிறது. இதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது. ஆக, 18 சதவீத ஜிஎஸ்டி தொகையான ரூ.22.5 தொகையுடன் சேர்த்து உங்கள் அக்கவுண்டில் ரூ.147.5 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஒருவேளை உங்கள் டெபிட் கார்டை நீங்கள் புதுப்பிக்கும் பட்சத்தில் உங்களுக்கு சேவை கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக ரூ.300 பிளஸ் ஜிஎஸ்டி என்ற அளவில் வங்கி சார்பில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஏடிஎம் கார்டுக்கான பராமரிப்புக் கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை எஸ்பிஐ மட்டுமல்லாமல் ஆக்சிஸ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி போன்ற இதர வங்கிகளும் மேற்கொள்கின்றன.
முன்னதாக, மெர்ச்சண்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலவினங்கள் ஆகியவற்றுக்காக அக்கவுண்டில் கூடுதல் தொகை இருப்பு வைக்குமாறு எஸ்பிஐ வங்கி இந்த மாத தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி அனைத்து மெர்ச்சண்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கான பிராஸசிங் கட்டணமானது ரூ.199 பிளஸ் பொருந்தத்தகுந்த வரிகள் என்ற அளவில் உள்ளது. அதேபோல அனைத்து வாடகை பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.99 மற்றும் தொடர்புடைய வரிகள் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.
மற்ற வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு பராமரிப்புக் கட்டணம் உண்டு:
வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டெபிட் அல்லது ஏடிஎம் கார்டுகளுக்கு எஸ்பிஐ வங்கி ஆண்டு பராமரிப்புக் கட்டணம் வசூல் செய்வதைப் போலவே, மற்ற வங்கிகளும் கட்டணம் வசூல் செய்கின்றன. உதாரணத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெம்பர்ஷிப் கட்டணமாக ரூ.250 மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.500 என்ற அளவில் வசூல் செய்யப்படுகிறது. பிஎன்பி டெபிட் கார்டை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.150 ஆகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியை பொருத்தவரையில் கார்டு மெம்பர்ஷிப் மற்றும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்பது ரூ.200 முதல் ரூ.750 என்ற வகையில் ஆகிறது. டெபிட் அல்லது ஏடிஎம் கார்டுகளுக்கு வசூல் செய்யப்படும் ஆண்டு பராமரிப்பு கட்டணத்தை தவிர்க்க விரும்பும் பட்சத்தில், உங்கள் கார்டை நீங்கள் ரத்து செய்துவிட்டு யூபிஐ, ஆன்லைன் பேங்கிங், கார்ட்லெஸ் பரிவர்த்தனை போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ATM Card, Credit Card, Fees, SBI, SBI Bank