எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கிரேடிட் கார்டு போலவே, டெபிட் கார்டு மூலமாகவும் இனி கடன் வாங்கி அதற்கு ஈ.எம்.ஐ கட்டலாம் தெரியுமா?
இதுவரை எஸ்பிஐ அல்லது மற்ற எந்த வங்கியின் கிரேடிட் கார்டை வாங்கி பயன்படுத்தாத பலருக்கும் இந்த தகவல் மற்றும் எஸ்பிஐ அறிமுகப்படுத்தியிருக்கும் வசதி நிச்சயமாக பயன் தரும். அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான தொகையைக் கடனாக பெற்று அதற்கு ஈ.எம்.ஐ கட்டலாம். டெபிட் கார்டு வாயிலாகவே POS இயந்திரம் அல்லது ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளத்திலும் எஸ்பிஐ டெபிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் பெறும் கடன் தொகைக்கு எஸ்பிஐ வங்கி 2 வருட MCLR விகிதம் உடன் 7.50 சதவீதம் வட்டியை வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் நீங்கள் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் அல்லது 18 மாதம் என்று 4 காலகட்டத்திற்கு ஈஎம்ஐ சேவை பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால் முதலில் உங்கள் தகுதியை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதாவது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணில் இருந்து DCEMI என்று 567676 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். அனைத்து விபரங்களையும், தகுதிகளையும் தெரிந்துகொள்ள முடியும். வங்கி நிர்வாகம் மொத்த விவரங்களையும் உங்களுக்கு அனுப்பி விடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த டெபிட் கார்டு மூலம் கடன் வாங்கி ஈ.எம்.ஐ ஆக மாற்றும் திட்டத்திற்கு எந்தவித செயல்பாட்டு கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம் தான். இந்த வசதியை பெற எவ்விதமான ஆவணங்களின் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருக்கும் பணமும் பிளாக் செய்யப்படாது. ஈ.எம்.ஐ தொகையை வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டு ஈஎம்ஐ சேவையை இரண்டு வழிகளில் பெற முடியும்.POS இயந்திரம் மூலம் எளிதில் செயல்படுத்தலாம். இரண்டாவது ஆன்லைன் தளங்கள். POS இயந்திரத்தில் கார்டை ஸ்வைப் செய்த பின்பு ,பிராண்ட் ஈஎம்ஐ தேர்வு செய்து, அதன் பின்பு பேங்க் ஈஎம்ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் செலுத்த வேண்டிய தொகையை பதிவு செய்து, Repayment tenor ஆப்சனை கிளிக் செய்து டெபிட் கார்டு பின் எண்-ஐ டைப் செய்து OK கொடுத்தால் போதும். மேலும் இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SBI